3 friends

மூன்று நண்பர்கள்

மூன்று நண்பர்களின் அறிவுக் கூர்மை, அவர்களுது ஒற்றுமை மற்றும் பல.

- Anitha Prabu

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

சோனு, மோனு மற்றும் ரீனா விளையாடச் சென்றனர்.

ஒரு பூனை குட்டியை கண்டனர்.

அந்த பூனைக் குட்டி, ஒரு பெரிய எலியைப் பார்த்தது.

"அதோ பார்" என்றான் சோனு.

சின்ன எறும்பு ஒன்று, அந்த பெரிய எலியை நோக்கிச் சென்றதை, ரீனா கண்டாள்.

ஒரு பெரிய நிழல் அவர்கள் மேல் திடீரென்று விழுந்தது.

ஒரு பெரிய கழுகு , சுவற்றில் அமர்ந்தது.

சின்ன எறும்பு, புனைக் குட்டி, பெரிய எலி மற்றும் கழுகு அனைத்தும் நீண்ட சாலையில் இருந்தன.

மூன்று புத்திசாலி சிறுவர்களும் இப்போது என்ன செய்வார்கள் ?

சிறுவர்கள் தங்கள் கைகளை தட்டினர்!

அந்த கழுகு தன் சிறகை விரித்துப் பறந்து சென்றது.

ரீனா, எறும்பை ஒரு இலையில் ஏறவைத்து, சுவற்றில் விட்டாள்.

அந்த எறும்பு சக்கரைக் கட்டியைப் பார்த்து தன் வீட்டிற்கு இழுத்துச் சென்றது.

பெரிய எலியோ பாதி தின்று மீதம் இருந்த பகொடாவை தூக்கிக் கொண்டு, சாக்கடைக்குள்

ஓடியது.

புனைக் குட்டி மியாவ் என்று தன் காலை நக்கியது.

மோனு, பூனைக்கு கிண்ணத்தில் பால் கொண்டுவந்தான்.

பின் மூன்று சிறுவர்களும் விளையாடினர்.

மரத்தில் அமர்ந்து இருந்த கழுகு கண் சிமட்டி, தூரப் பறந்து சென்றது.