aaloo maaloo kaaloo

ஆளூ-மாலூ-காலூ

ஒரு நாள் மாலூவை தன் பாட்டி தோட்டத்தில் இருந்து சிறிது உருளைக்கிழங்குகளை எடுத்து வரச் சொன்னார்கள், ஆனாள் அவனால் ஒன்றினைக் கூட கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர், காலூ, மறைந்துள்ள உருளையை கண்டுபிடிக்க உதவுவதை பார்ப்போமா?

- Pavithra Murugan

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

முதன் முறையாக, மாலூ தோட்டத்தில் இருந்து  காய்கறிகளை சேகரித்துக் கொண்டு இருந்தான்.

அவன் நன்கு பழுத்து சிவந்த தக்காளிகள், புத்தம் புது கத்தரிக்காய்கள், மற்றும் பிஞ்சு வெண்டைக்காய்களை சேகரித்து இருந்தான்.

"சபாஷ், மாலூ! தோட்டத்திற்கு மீண்டும் சென்று கொஞ்சம் உருளைக்கிழங்குகளையும் கொண்டு வா" என்று சொன்னார்கள் அவன் பாட்டி.

மாலூ எல்லா மரம், செடி, கொடிகளிலும் தேடினான். ஒரு உருளைக்கிழங்கைக் கூட அவனாள் காண முடியவில்லை.

"பாட்டி, உருளைக்கிழங்குகள் எதுவும் இன்னும் விளையவில்லை", என்று கூறி காலி கூடையை மாலூ கீழே போட்டான்.

"இல்லை மாலூ, நிறைய உருளைக்கிழங்குகள் உள்ளன. கவனமாக பார்," என்றார்கள் பாட்டி.

மாலூ மீண்டும் தோட்டத்திற்கு சென்றான். காலூவும் அவனைத் தொடர்ந்து சென்றது.

மாலூ உருளைக்கிழங்குகளைத் தேடிக் கொண்டு இருந்த போது, "லொல்! லொல்!" என்று சத்தம் கேட்டது.

"காலூ! நில், காலூ!" என்று கத்திக் கொண்டே மாலூ அதன் பின் ஓடினான். "தொட்டதைப் பாழ் ஆக்காதே."

மாலூ, காலூ மண்ணைத் தோண்டிக் கொண்டு இருப்பதைப்பார்த்தான். அதன் உள் இருந்து என்ன வந்தது என்று நினைக்கிறீர்கள்?

நன்கு வளர்ந்த பெரிய குண்டு உருளைக்கிழங்குகள்!

"நல்ல வேலை செய்தாய், காலூ! நீ உருளைக்கிழங்குகளைக் கண்டுபிடித்துவிட்டாய்!" என்று சிறித்துக் கொண்டே கூறி, மாலூ உருளைக்கிழங்குகளைக் கூடையில் நிரப்பினான்.