குரங்குகள் விளாம்பழங்களை உடைத்து உண்டன.
ஆமைகள் அதை ஏக்கத்துடன் பார்த்தன.
“நாங்களும் சாப்பிட வேண்டும்” கிப்பா ஆமை சொன்னது. “ எப்படி உடைப்பது? ” மற்றைய ஆமைகள் கேட்டன.
“குரங்காரே! பழத்தை உடைத்துத்தர முடியுமா?”
“ஊ.. ஊ... முடியாது” என குரங்குகள் கேலி செய்தன.
வாயால் கடிக்கவும் முடியவில்லை.
ஊறவைத்து உடைப்போமா?
பழங்கள் நீரில் மிதந்தன.
பழங்களைத் தலையால் தூக்கியெறியவும் முடியவில்லை.
“இப்படிச்செய்தால் என்ன?” கிப்பா கேட்டது.
கற்களைக் கொண்டுவந்து மரத்தின் கீழே பரப்பின.
மறுநாள், உதிர்ந்த பழங்கள் கற்களின் மீது விழுந்தன.
படீர்! படீர்! ஆமைகளுக்கு ஒரே கொண்டாட்டம்.