ஊருக்கு ஒதுக்குப் புறமாக ஒரு கொடிய விஷமுள்ள பாம்பு வாழ்ந்து வந்தது.
ஊர் மக்கள் யாராவது அதன் புற்றின் பக்கம் போனால் அது சீறி கொத்தி விடும்.
பாம்பு புற்று இருந்த பாதை அந்த ஊருக்கும் பக்கத்து சந்தைக்கும் நடுவே இருந்தது.
பாம்புக்கு பயந்தே அந்த ஊர் மக்கள் பல தொலைவு சுற்றி சந்தைக்கு போய் வந்து கொண்டிருந்தார்கள்.
ஒரு நரி பாம்பு படிப்பவரை அழைத்து வந்து அந்த பாம்பை பிடித்து தொலைதூர காட்டுப்பகுதியில் கொண்டு போய் விட்டு விடலாம் என்று சொன்னது.
மக்களும் அதை ஏற்றுக்கொண்டு பாம்பு படிப்பவரை வரச்சொல்லி பாம்பை பிடித்தனர். பாம்பு தங்கியிருந்த பகுதியை சுத்தம் செய்தனர்.
மக்கள் அனைவரும் பயம் இன்றி, எளிதாக சந்தைக்கு சென்று வந்தனர்.