aaru

ஆறு

ஆறு என்பது மேகங்கள் சிந்தும் மழைத்துளிகளை சேமித்து வைக்கும் பெட்டகம். ஆறு என்பது மேகங்களின் சரம். அதில் மீன்கள் உலாவும், அதன் கரைகளில் பயிர்கள் செழிக்கும். ஆற்றின் பல்வேறு பெருமைகளைப் பேசும் புத்தகம் இது.

- S. Bala bharathi

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

ஆறு என்பது மேகத்தின் உண்டியல்.

மேகங்கள் மழைத்துளிகளாகிய தங்கள் நாணயங்களை சேமிக்கும் இடம். ஆறா, இல்லை மேகங்களைக் கோர்த்து வைத்த சரமா?

ஆறு என்பது ஒரு நகரும் நகரம். எண்ணற்ற உயிர்களுக்கு அதுவே அழகிய வீடு!.

ஆறு நமது தாகத்தைத் தீர்க்கும் இடம். மீன்களுக்கோ சுவாசம் கொடுக்கும் இடம்.

முதலைகளின் காலக் கடிகாரம். ஆறா, இல்லை மேகங்களைக் கோர்த்து வைத்த சரமா?

ஆறு, தன் கரைகளுக்குப் பசுமை ஒளி ஏற்றுகிறது. விவசாயிகளின் பிரார்த்தனைகளுக்கு பதிலளிக்கிறது.

மண்ணின் நிறத்தை மாற்றுகிறது. ஒவ்வொரு மரத்தையும் தன் குளிர் கரங்களால் வருடுகிறது.

அணைகளில் விஸ்வரூபம் காட்டி நிமிர்ந்து நிற்கும் ஆற்றைப் பாருங்கள். ஆறா, இல்லை மேகங்களைக் கோர்த்து வைத்த சரமா?

சூரியன் ஒரு தேர்ந்த மீனவனைப் போல் ஒவ்வொரு நீர்த்துளியாக உறிஞ்சுகிறான்.

எத்தனை முறை பார்த்தாலும் ஒவ்வொரு முறையும் புதிதாய் பார்ப்பது போலிருக்கிறது.

ஆற்றின் கரங்களில் ஒரு மந்திரக் கோல் இருக்கிறது. ஆறா, இல்லை மேகங்களைக் கோர்த்து வைத்த சரமா?