கஜான்னு ஒரு குட்டி யானை, அது உருண்டு திரண்டு இருந்ததாம்.சின்னுன்னு ஒரு குட்டி முயல், அது பார்க்க பஞ்சு பொதி போல இருந்ததாம்.
இரண்டு பேரும் ஒண்ணா விளையாடுவார்களாம்.ஒரு நாள், கஜா நாம இன்றைக்கு ஒரு புது விளையாட்டு ஆடலாம்ன்னு சொன்னானாம்.
நீ முட்டி போட்டுக்கோ, நான் ஒரே தாவு தாவி, உன் முதுகுல உட்கார்ந்துக்குறேன்னு சின்னு சொன்னானாம்.அதனால காஜாவும் முட்டிப் போட்டு உட்கார்ந்தானாம் சின்னுவும் ஒரே தாவு தாவினானாம்.
தொப்! சின்னா கஜாவின் முதுகில் விழுந்தானாம்.ஆஹா! இது நல்லா இருக்கேன்னு கஜா சிரிச்சிக்கிட்டு, இப்ப என்னோட முறை, நீ போய் உட்கார்ந்துக்கோ, நான் உன் முதுகில குதிக்கிறேன்னு சொன்னானாம்.
நீயா?ஆமாம், நானே தான்!உன்னால எப்படி முடியும்ன்னு சின்னு கேட்டானாம்.
இதோ இப்படித்தான்னு கஜா குதிச்சி காண்பிச்சானாம்.
தட தட தடவென தேங்காயெல்லாம் கஜா தலையில விழுந்ததாம்.
மட மட மடவென அவன் பயந்து பாய்ந்து ஓடிட்டானாம்.
ஒரு சின்ன தேங்காய் சின்னுவின் தலையிலும் விழுந்ததாம்.
அந்த யானைக்கு இந்த தேங்காயே தேவலைன்னு சொன்னானாம்.