adhu enakku venum

அது எனக்கு வேணும்

அனில் "அது எனக்கு வேணும்" என்று கேட்கிறான். அவன் கேட்பதையெல்லாம் "இல்லை, இல்லை, அது வேண்டா" என்று சொல்கிறார்கள். அனிலுக்குக் கோபம். கடைசியில் அவனுக்கே புரிகிறது.

- Logu Venkatachalam

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

அன்று அம்மாவுக்கு விடுமுறை. அவர் ஒரு புத்தகம் படித்துக்கொண்டிருந்தார். அனிலுக்கும் அன்று விடுமுறை. அவன் எதையாவது செய்ய விரும்பினான்.

"அம்மா, அந்த நீலப் பெட்டியில் என்ன இருக்கு?" என்று அனில் கேட்டான்.

"அப்புறம், அனில்" என்று அம்மா சொன்னார்.

அனில் ஒரு நாற்காலி மீது ஒரு ஸ்டூலைப் போட்டான். அந்தப் பெட்டியை எடுக்க மேலே ஏறினான்.

"வேண்டா, வேண்டா! அது வேண்டா! எல்லா பெட்டியும் உன் தலை மேலே விழும்" என்று அம்மா சொன்னார்.

அனிலுக்கு ரொம்ப கோவம். அவன் அம்மா மேல் கோபம்.

"கடைக்குப் போகலாம் வா. நான் உனக்கு ஏதாவது வாங்கித் தருகிறேன்" என்று அம்மா சொன்னார்.

கடைக்குப் போன பிறகும் அனிலுக்குக் கோபம்.

"எனக்கு அது வேண்டும்" என்று ஒரு ஆரஞ்சு பழத்தைப் பார்த்துக் கேட்டான்.

"இல்லை, இல்லை. அது வேண்டா! அதை எடுத்தால் மற்ற பழங்கள் எல்லாம் கீழே விழுந்துவிடும்" என்று கடைக்காரர் சொன்னார்.

"எனக்கு அந்தப் புத்தகம் வேணும்" என்று அனில் கேட்டான்.

"அது வேண்டா", "இதை எடுத்துக்கொள்" என்று கடைக்காரர் சொன்னார்.

"எனக்கு இது வேணும்" என்று சொல்லி அடுக்கி வைத்திருந்த சமோசாவை எடுக்கப் பார்த்தான்.

"இல்லை, இல்லை, அது வேண்டா!" கடைக்காரர் எச்சரித்தார்.

"என் சமோசா எல்லாம் கீழே விழுந்துவிடும்!"

"எனக்கு அது வேணும்" அனில் சத்தமாக சொன்னான். அப்ப அனில் ரொம்ப கோபமாக இருந்தான்.

"இல்லை, இல்லை, அது வேண்டா!" என்று கடைக்காரர் சொன்னார்.

"அந்த பூக்கள் நசுங்கி விடும்!"

அப்போது சத்தமாக அழுதான். எல்லோரும் அவனைப் பார்த்தார்கள்.

"அது எனக்கு வேணும்! அந்த கருப்பு நிறமுள்ளது வேணும்! அம்மா சத்தமாகச் சொன்னார்.

அனில் அழுவதை நிறுத்தினான்.

"அம்மா, இல்லை, இல்லை. அது வேண்டா!" என்று அனில் சொன்னான்.

"இந்த பழுப்பு நிறத்தில் இருப்பதை எடுத்துக்கொள்ளலாம்!" என்று அனில் சொன்னான். அனில் மெதுவாக மேலே உள்ள பழுப்பு நிற நாய்க்குட்டியை எடுத்தான்.

"அம்மா, உங்க மேலே எனக்குக் கோபம். கருப்பு குட்டியை எடுத்து இருந்தால் எல்லா குட்டிகளும் கீழே விழுந்திருக்கும்." அம்மா சிரித்தார். அனிலும் சிரித்தான்,