adhu enna

அது என்ன?

அது என்ன? அது என்னைப் போல் இல்லை. அது பயங்கரமானது என நினைக்கிறாயா?

- venkataraman Ramasubramanian

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

அது என்ன?

அது என்ன ?

அதற்கு தும்பிக்கை இல்லை.

அது என்னைப் போல் இல்லை.

அது என்ன?

அதற்கு வால் இல்லை.

அது என்னைப் போல் இல்லை.

அது என்ன? சே...

அதன் இறக்கைகள் எங்கே?

அது என்னைப் போல் இல்லை.

அது என்ன ?

அதன் சிறிய பாதங்களைப் பாருங்கள்.

அது நம்மைப் போல் இல்லை.

அது பயங்கரமானது

என நினைக்கிறாயா?

அது நம்மை சாப்பிட

ஆசைப்படுகிறது

என நினைக்கிறாயா?

அச்சோ !

அச்சச்சோ!

ஆ.... !

ஓ..... !

ஓடு.....!

அது நம்மை துரத்தி வருகிறது!

ஜாக்கிரதையாக இரு.

திரும்பி வந்துவிடு.

அது ஒரு குழந்தை

என்னைப் போலவே!