என் நண்பன் சுமாவுடன் விளையாடுவது எனக்குப் பிடிக்கும்.
நாங்கள் நல்ல நண்பர்கள்.எங்களில் ஒருவரை எங்காவது அனுப்பினால், நாங்கள் இருவரும் சேர்ந்தே செல்வோம்.
ஒரு நாள், என் பாட்டி உப்பும் சமையல் எண்ணையும் வாங்க என்னைக் கடைக்கு அனுப்பினார். நான் சுமாவுடன் சென்றேன்.
வழியில், நாங்கள் எங்கள் நண்பர்கள் கால்பந்து விளையாடுவதைப் பார்த்தோம்.
"ஆ! கால்பந்து!" என்று நான் சொன்னேன். நானும் விளையாட விரும்பினேன்.
நான் சுமாவிடம் சொன்னேன்,"நாமும் அவர்களுடன் விளையாட முடியுமா என்று அவர்களைக்
கேட்கலாம். எனக்கு கால்பந்து விளையாடுவது என்றால் ரொம்பப் பிடிக்கும்."
சுமா பதிலளித்தான், "முதலில் நாம் கடைக்குப் போகலாம், பிறகு வந்து விளையாடலாம்."
ஆனால் நான் பதிலளித்தேன்," நாம் முதலில் விளையாடலாம்!" "பாட்டி நம்மைத் திரும்பிவர அனுமதிக்கமாட்டார்."
நாங்கள் எங்கள் நண்பர்களுடன்விளையாடசேர்த்துக்கொண்டோம் . நான் தான் கோல் கீப்பர். கோல் கம்பங்கள் இரண்டு பெரிய கற்களால் ஆனது.
நான் கடுமையாக முயற்சி செய்து பந்தைப்பிடித்தேன்.என் நண்பர்களால் கோல் போட முடியவில்லை.
மைதானம் முழுவதும் மணல் ஆகும் வரை விளையாடினோம்.
பிறகு நாங்கள் கடைக்குச் சென்றோம். பாட்டியின் பணம் காணவில்லை! நான் அழத் தொடங்கினேன்.
சுமா கத்தினான், "அழுவதை நிறுத்து. நீதான் முதலில் விளையாட வேண்டும் என்றாய்."
உப்போ சமையல் எண்ணையோ இல்லாமல் நாங்கள் வீடு திரும்பினோம் . நாங்கள் மிகவும் அழுக்குடனும் வருத்தத்துடனும் இருந்தோம்.
நாங்கள் வீடு திரும்பிய போது பாட்டி எரிச்சலுடன் இருந்தார். அவர் எங்களிடம் கேட்ட முதல் கேள்வி," இவ்வளவு நேரம் எங்கே இருந்தீர்கள்?"
நாங்கள் அவரிடம் உண்மையை சொல்ல வேண்டியதாயிற்று. அவர் எங்களை மன்னித்து எச்சரித்தார்,"இனிமேல் அனுமதி இல்லாமல் விளையாடப் போகக் கூடாது."
நாங்கள் வாத்துகளுக்கு உணவு கொடுக்கச் சென்றோம். பிறகு, எங்களைச் சுத்தம் செய்துக் கொண்டோம்.