அக்கா! அக்கா! எனக்குப் புரியலை?
என்ன புரியலை? சின்னதம்பி என்ன புரியலை?
வானம் ஏன் நீலமா இருக்குது எனக்குப் புரியலை! எனக்குப் புரியலை!
நீ என்ன நினைக்கிறே சின்னதம்பி என்ன நினைக்கிறே?
நான் நினைக்கிறேன்...
நீ என்ன நினைக்கிறே சின்னதம்பி என்ன நினைக்கிறே?
நான் நினைக்கிறேன்...
வானம் என்பது உண்மையில்
கவிழ்த்து வைத்த கடல்,
மேகப்படகுகள் மெதுவாய் அசைந்தாடும்,
மிகப் பெரிய்ய்ய்ய விரிப்பு.
தலைகீழாய் கவிழ்த்த கடலை தாங்கி,
கடல் நீர் கீழே சிந்தாமல் இருக்க, மிக துல்லியமான
பிளாஸ்டிக் விரிப்பு!
பிளாஸ்டிக் விரிப்பு சில சமயம்,
சாதாரண பிளாஸ்டிக் போல
இங்குமங்கும் கொஞ்சம் கிழிய,
மழையாக நீர் கொட்டுகிறது!
இதனால்தான் வானம் நீலம் என நினைக்கிறேன்!
ஏனெனில் அது ஒரு கடல்!
கடலின் நிறமோ நீலம்!
புத்திசாலி நான் அக்கா? அப்படித்தானே?
நிச்சயமா! சின்னதம்பி! நீ புத்திசாலிதான்!
நீ சொன்னதில் கூட உண்மையிருக்கலாம்!
ஆனால் நான் படித்த புத்தகங்கள்
சொல்வது இப்படி இல்லையே!
என்ன சொல்லுது? அக்கா என்னதான் சொல்லுது?
நீ என்ன நினைக்கிறே? சின்னதம்பி என்ன நினைக்கிறே?
நான் நினைக்கிறேன், நான் நினைக்கிறேன்.
சொல்லு சின்ன தம்பி! நீ என்ன நினைக்கிறே?
நான் நினைக்கிறேன்...
ஒரு வேளை அந்த பாட்டி,
வானத்தில் வாழும் மூதாட்டி!
துவைக்கிறாள் இரவில் பெரிய்ய்ய்ய நீலப்புடவையை!
காய வேண்டுமென சூரியன் முன் காலை நேரம்
தினம் போடுகிறாள்.
அந்த மூதாட்டிரொம்ப கவனமானவள்!
மேகக் கற்களை புடவையின் மீது பரப்பி வைக்கிறாள்!
இதனால் குறும்புக்கார காற்று,
புடவையை எடுத்துப் போக முடியாது!
வானத்தில் வாழ்கின்ற மூதாட்டி புடவையை
பரப்பி காய வைக்கிறாள். இதனால்தான்
வானம் நீலம் என்று நினைக்கிறேன்!
புத்திசாலி நான் அக்கா? அப்படித்தானே?
நிச்சயமா! சின்னதம்பி! நீ புத்திசாலிதான்!
நீ சொன்னதில் கூட உண்மையிருக்கலாம்!
ஆனால் நான் படித்த புத்தகங்கள்
சொல்வது இப்படி இல்லையே!
என்ன சொல்லுது? அக்கா என்னதான் சொல்லுது?
நீ என்ன நினைக்கிறே? சின்னதம்பி என்ன நினைக்கிறே?
நான் நினைக்கிறேன், நான் நினைக்கிறேன்...
சொல்லு சின்ன தம்பி! நீ என்ன நினைக்கிறே?
நான் நினைக்கிறேன்...
வெகுநாட்களுக்கு முன் நடந்த ஹோலியின் போது
கடைகளில் வர்ணங்கள் எல்லாம் தீர்ந்து போயின நீலத்தைத் தவிர!
நான் நினைக்கிறேன்... அந்த நாள்,
பெரிய நீலத்தூசிப்படலம் எழுந்து, எங்கும்
நிறைந்த சந்தோஷமான நீல மனிதர்களிடமிருந்து!
அது மேலே மேலே மேலே சென்றது
வானத்தில் சென்று நின்றது!
வானத்தில் வாழ்கின்ற மூதாட்டி,
வானத்தை துடைப்பது அவள் தினசரி வேலை.
மேகமென்னும் பஞ்சுப் பொதியைக் கொண்டு,
கறைகளை நீக்க வேண்டும் சுத்தமாய் என்றும்!
பார்க்கும் போதெல்லாம் மூதாட்டிக்கு கோபம் தரும்,
நீக்க முடியாத அந்த நீலக்கறையால்தான்
வானம் எப்பொழுதும் நீலமென நினைக்கிறேன்!
புத்திசாலி நான் அக்கா? அப்படித்தானே?
நிச்சயமா! சின்னதம்பி! நீ புத்திசாலிதான்!
நீ சொன்னதில் கூட உண்மையிருக்கலாம்!
ஆனால் நான் படித்த புத்தகங்கள்
சொல்வது இப்படி இல்லையே!
என்ன சொல்லுது? அக்கா என்னதான் சொல்லுது?
இங்கே வா சின்னதம்பி! அவை சொல்வதை நான் சொல்திறேன்!
புத்தகங்கள் சொல்லுது...
என்ன சொல்லுது? அக்கா என்னதான் சொல்லுது?
ஊதா - இண்டிகோ - நீலம் - பச்சை - மஞ்சள் - ஆரஞ்சு - சிவப்பு - வெள்ளை
புத்தகம் சொல்லுது!
இந்த வானவில்லின் ஒளிதான்
நம்மை நோக்கி வருகிறது,
வாயுமண்டலத்தின் மூலம்!
வானத்தின் நிறம் நீலம் ஏன்? அக்கா? ஊதா, மஞ்சள் பச்சையில்லையே?
சொல்வதை கேள் சின்னதம்பி! கேட்டால் உனக்கே புரியும் விஷயம்!
வாயுமண்டலத்தின் மூலக்கூறுகள்,
உண்மையில் அவை கொஞ்சம் மோசம்!
சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு ஒளியை கடந்திட வைக்குது தாராளமாய்!
பச்சைக்குக் கூட அனுமதி உண்டு!
பாவம் இந்த நீலநிறம்! தடைகள் வழியில் மிக அதிகம்!
நீலத்தை என்ன செய்வார்கள் அக்கா? என்னதான் செய்வார்கள்?
சொல்லுங்கள் அக்கா, என்னதான் செய்வார்கள்!
பல லட்சம் மூலக் கூறுகள் மீது,
பளிச்சென சூரியஒளிபடும் போது,
நீலநிறம், இந்த நீல ஒளி,
திரும்பிப் போகுது வந்த வழி!
பாவம் இந்த நீலநிறம்!
உடையுது!
வானத்தில் சிதறுது,
வானம் பெறுது நீலநிறம்!
இது உண்மையாய் இருக்குமா அக்கா! உண்மையாய் இருக்குமா இது?
என்னால் சொல்ல முடியாது என் அருமை சின்ன தம்பி!
புத்தகங்கள் எல்லாம் நான் படித்தபோது
சொன்னதென்னமோ இதுதான்!
மேலும் தெரிந்து கொள்ளுங்கள்!
வானம் ஏன் நீல நிறம்?
வானவில்லில் உள்ள ஏழு நிறங்களானசிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், பச்சை, நீலம், இண்டிகோ, ஊதா இவைஅனைத்தும் கலந்தது சூரியனின் வெண்மை ஒளி, சூரிய ஒளி நம்கண்களை அடையுமுன் நம்மைச் சுற்றி சூழ்ந்துள்ள வாயுமண்டலத்திலுள்ள வாயுமூலக் கூறுகளை கடந்து வரவேண்டும். ஒவ்வொரு ஒளியும், உண்மையில்வெவ்வேறு அலை அளவுகளை கொண்ட மின் காந்த கதிர் வீச்சு.
இவ்வாறு வெவ்வேறு அலை நீளம் உடைய ஒவ்வொரு நிறமும்வாயுமண்டல மூலக்கூறுகளைச் சந்திக்கும் பொழுது வெவ்வேறு விதமாக வினைபுரிகிறது. மற்ற அதிக அளவு அலைநீளம்கொண்ட நிறங்களை விட குறைந்த அளவேஅலை நீளம் கொண்ட நீலநிறம் அதிகமாக சிதறுகிறது. இது வானத்தின் எல்லாபாதங்களிலும் சிதறடிக்கப் படுவதால் வானம்நீல நிறமாக காட்சியளிக்கிறது.
செய்து பாருங்கள்!
ஏன் அதிகாலையிலும், அந்தி மாலையிலும், வானம்
ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிறமாக காட்சி தருகிறது?
தேவை:
நீர் நிரம்பிய சுத்தமான கண்ணாடி டம்ளர்.
கொஞ்சம் பால்.
டார்ச் விளக்கு.
செய்முறை:
டம்ளரிலுள்ள தண்ணீர் மீது டார்ச் ஒளியைசெலுத்துங்கள். நீரில் ஒளி தெரிகிறதா? மிகக்குறைவாகத் தெரிகிறது. இப்பொழுது சில துளிகள் பாலை சேருங்கள். மீண்டும் டார்ச் ஒளியைபாய்ச்சுங்கள். இப்பொழுது அதிகமாக ஒளிதெரியும் இன்னும் அதிகம் பால் சேருங்கள்.இப்பொழுது தெரியும் ஒளி குறிப்பாக நீலமாகத் தெரியும்.
காரணம் என்ன?
நாம் நீரில் கொஞ்சமாகபாலை சேர்க்கும் பொழுது,நீரில் உள்ள மூலக் கூறுகளின் எண்ணிக்கைஅதிகமாகிறது. பாலில் உள்ள கொழுப்பு மற்றும் புரோட்டீன் மூலக்கூறுகள் ஒளியை சிதறடிப்பதால்நாம் ஒளியை பார்க்கிறோம். பாலை அதிகம் சேர்க்கச் சேர்க்க, ஒளி அதுவும் குறிப்பாக, குறைந்த அலைநீளம் உள்ளநீலஒளி, அதிகமாத சிதறடிக்கப்படுகிறது.