ameena enna seikiraal

அமீனா என்ன செய்கிறாள்?

தூங்கி வழியும் ஒரு ஞாயிற்றுக்கிழமை மதிய வேளையில், அமீனா என்ன செய்து கொண்டிருக்கிறாள்? என்று எல்லோரும் ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தனர். அது சரி! தேங்காய் மூடி, வண்ணம், பொத்தான்கள், செய்தித்தாள் எல்லாம் எங்கே போயின?

- S. Jayaraman

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

பாபா தேங்காய்ச் சட்னி செய்கிறார்.

“ அட! எங்கே தேங்காய் மூடியைக் காணோம்?”

ஆப்பா வானத்துக்கு வண்ணம் அடிக்க நினைக்கிறாள்.

“ஓ! எங்கே நீல வண்ணச் சாயத்தைக் காணோம்?’’

அம்மி குறுக்கெழுத்துப் புதிரை நிரப்பலாம் என நினைக்கிறார்.

“ஹும்ம்! எங்கே செய்தித்தாளைக் காணோம்?”

தாதியின் ஊசி துணிகளுக்கு இடையே நுழைந்து வெளியேற் வித்தை காட்டுகிறது.“ஆனால்! எங்கே பொத்தான்களைக் காணோம்?”

“வீடு ரொம்ப அமைதியாக இருக்கிறதே!” என்கிறார் பாபா .

“அமீனா ஏதாவது செய்து கொண்டிருக்க வேண்டும்!”

“அமீனா எங்கே? அமீனாவைப் பார்த்தீர்களா?” என்று அம்மி கேட்கிறார்.

“அமீனா கட்டாயம் ஏதாவது செய்து கொண்டிருப்பாள்” என்கிறார் தாதி.

“நான் ஒரு வேற்றுகிரக வாசியைச் செய்து கொண்டிருக்கிறேன்!” என்று சிரிக்கிறாள் அமீனா. “ஓ! அமீனா இதைத்தான் செய்து கொண்டிருந்தாளா!” என்றாள் ஆப்பா.