amma andha paravaiyai azhaiyungal

அம்மா, அந்த பறவையை அழையுங்கள்!

ஒரு பறவையைத் தத்தெடுக்க உதவுமாறு தன் தாயிடம் சிறு குழந்தை கேட்கிறது.

- Ugenther Kumar

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

அம்மா! அந்த மரத்தில் இருக்கும் பறவையை இங்கே அழையுங்கள்.

அம்மா! அந்த பறவைக்குக் கொஞ்சம் தானியங்களைப் போடுங்கள், அவள் நம்மிடம் வரட்டும்.

அம்மா! அந்த பறவை எப்படி தானியங்களைச் சாப்பிடுகிறது என்று நான் பார்க்க வேண்டும்.

அம்மா! அவள் எப்படி தன் கால்களால் தரையில் நிற்பாள்?

அம்மா! அவள் எப்படி தரையில் நடப்பாள் ?

அம்மா!  அந்த பறவைக்குத் தாகமாக இருக்கலாம், அவளுக்குக் கொஞ்சம் தண்ணீர் வைப்போம்.

அம்மா! அந்த பறவை மிகவும் அழகாக உள்ளது.

அம்மா! அவள் பாடும் பாட்டை நான் கேட்க வேண்டும்.

அம்மா! அவள் எப்படி ஆடுகிறாள் என நான் பார்க்க வேண்டும்.

அம்மா! அந்த பறவையுடன் நான் விளையாட வேண்டும்.

அம்மா!  கயிற்றினால் அவளுக்கு ஒரு ஊஞ்சலை உருவாக்குவோம்.

அம்மா! அவள் கால்களில் ஒன்றும் இல்லை. அவளுக்கு 'ஷூ' கொடுப்போம்.

அம்மா! அந்த பறவையிடம் ஆடை இல்லை. அவளுக்கு ஆடை தைத்துக் கொடுப்போம்.

அம்மா! அந்த பறவை என் தோழி.

அம்மா! அந்த பறவையிடம் எப்போதும் நம்முடனே இருக்குமாறு கூறுங்கள்.