amma kozhiyum thiruvizhavum

அம்மா கோழியும் திருவிழாவும்

அம்மா கோழி பொறுமையாக முட்டைகளை அடைகாத்துக் கொண்டிருந்தது. குஞ்சுகள் வெளிவர எவ்வளவு நேரமாகும்? அம்மா கோழி அன்று நடக்கும் திருவிழாவுக்கு போக முடியுமா?

- Tamil Madhura

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

அம்மா கோழி முட்டைகளை அடைகாத்துக் கொண்டிருந்தது.

அது முட்டை பொரிந்து குஞ்சுகள் வெளிவரக் காத்துக் கொண்டே இருந்தது.

அம்மா ஆடு அவ்விடத்தைக் கடந்தது.

"என்னுடன் திருவிழாவுக்கு வர்றியா?" என்று அம்மா கோழியிடம் கேட்டது.

"நான் முட்டைகளை அடைகாத்துக் கொண்டிருக்கேன்" என்றது அம்மா கோழி.

ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு.

மொத்தம் ஆறு முட்டைகள்!

அம்மா பன்றி  அந்த இடத்தைக் கடந்து சென்றது.

"என்னுடன் திருவிழாவுக்கு வர்றியா" என்றது.

"நான் என் முட்டைகளை அடைகாத்துக் கொண்டிருக்கேன்" என்றது அம்மா கோழி.

ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு. மொத்தம் ஆறு முட்டைகள்!

அம்மா பசு கடந்து சென்றது .

"என்னுடன் திருவிழாவுக்கு வர்றியா" என்று அம்மா கோழியிடம் கேட்டது.

"நான் முட்டைகளை அடைகாத்துக் கொண்டிருக்கேன்" பதில் அளித்தது அம்மா கோழி.

அம்மா கோழி ரொம்ப நேரம் காத்துக் கொண்டே இருந்தது.

"எப்ப நான் என் கோழிக் குஞ்சுகளைப் பார்ப்பேன்"

திடீரென்று அம்மா கோழி எதையோ உணர்ந்தது.

என்ன நடக்கிறது?

ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு.

கிராக்!  கிராக்!  கிராக்!  கிராக்!  கிராக்!  கிராக்!

ஆறு முட்டைகளும் பொரிந்துவிட்டன.

அம்மா கோழி தனது குட்டிக் கோழிக் குஞ்சுகளைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தது.

அப்போதுதான் கோழிக்கு நினைவு வந்தது. இன்று திருவிழா!

அம்மா ஆடு, அம்மா பன்றி, அம்மா பசு அனைவரும் முன்பே சென்று விட்டனர்.

அம்மா கோழி இப்பொழுது தனது குஞ்சுகளுடன் திருவிழாவுக்கு செல்லத் தயார்.

ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு.

அம்மா கோழியும் ஆறு கோழிக் குஞ்சுகளும் திருவிழாவில் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழித்தனர். அம்மா கோழி காத்திருந்தது வீண் போகவில்லை.