"மீரா, நான் இன்று உன் பள்ளிக்கு சென்றேன்!" என்று அம்மா ஒரு நாள் சொன்னார்.
"நிஜமாகவா?" மீரா கேட்டாள்.
"வாயில் கதவு அகலமாக திறந்திருந்தது , மற்றும் காவலாளியை காணவில்லை!"
"அதுவா ! அவர் எங்கள் வகுப்பறையில் இருந்தார் , ஆசிரியர் ஏன் கத்தினார் என்று பார்க்க வந்தார்!"
" ஆசிரியர் ஏன் கத்தினார் ?" அம்மா கேட்டார் .
"ஏனெனில் ரோஹன் அழ தொடங்கினான் !"
"ரோஹன் ஏன் அழுதான் ?" அம்மா தெரிந்துகொள்ள நினைத்தார் .
"ஏனெனில் அவன் மிருகக்காட்சி சாலையிலிருந்து எடுத்து வந்த பாம்பு அவன் எலியை சாப்பிட்டது! அதற்கு பிறகு ஆசிரியர் கத்தினார் மற்றும் காவலாளி ஓடி வந்தார் !"
"ஆனால் நான் உன் வகுப்பறைக்கு சென்றபோது அங்கு யாரும் இல்லையே !" என்று அம்மா சொன்னார்.
"நாங்கள் அனைவரும் ஆசிரியர் அறையில் ஒளிந்துகொண்டிருந்தோம்," என்று மீரா சொன்னாள்.
"ஏனெனில் ரோஹனின் பாம்பு எங்கள் வகுப்பறையில் இருந்தது !"
"ஆனால் மீரா , நான் ஆசிரியர் அறைக்கு சென்றபோது அங்கு யாரும் இல்லையே !"
"அது ஏனெனில் நாங்கள் அனைவரும் தலைமை ஆசிரியர் அறைக்கு ஓடி விட்டோம்,"என்று மீரா சொன்னாள்.
"ஏனெனில் பாம்பு எங்களை தொடர்ந்து வந்தது என்று ரோஹன் சொன்னான் !"
"ஆனால் நான் தலைமை ஆசிரியர் அறைக்கு சென்றபோது , அது காலியாக இருந்தது!" என்று அம்மா சொன்னார் .
"எங்களால் அங்கு இருக்க முடியவில்லை," என்று மீரா சொன்னாள், "ரோஹனின் பாம்பு அவனை தேடியது . நாங்கள் மொட்டை மாடிக்கு ஏறி மணி அடிக்கும் வரை அங்கேயே இருந்தோம்!"
"நான் தனியாக நிறைய நேரம் பள்ளியில் காத்துக்கொண்டிருந்தேன்!" என்று அம்மா சொன்னார்.
"தனியாக இல்லை அம்மா, பாம்பு உங்களுக்கு துணையாக இருந்தது!" என்று மீரா சொன்னாள்.
"என்ன பாம்பா!", என்று கன்னத்தில் கை வைத்துக்கொண்டு நாற்காலியில் உட்கார்ந்தார் அம்மா.