ammachiyin visithira visaaranai

அம்மச்சியின் விசித்திர விசாரணை

உண்ணியப்பங்களை யாரோ திருடுகிறார்கள்! துப்பறிவாளர்கள் அம்மச்சியும் சூரஜும் திருடர்களைக் கண்டுபிடிக்க தடயங்கள் தேடி, பொறி அமைத்து, உதவி செய்வோம் வாருங்கள்!

- Praba Ram,Sheela Preuitt

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

“அய்யோ! உண்ணியப்பங்களைக் காணோம்!”என்றார் அம்மச்சி.

“யாரோ அதைத் திருடியிருக்கணும்!” என்றான் சூரஜ் .

“யாரா இருக்கும்?” என்று கேட்டார் அம்மச்சி.

“பென்னியாக இருக்கலாம், இல்லை பரணில் இருக்கும் புனுகுப்பூனையாக இருக்கலாம்” என்றான் சூரஜ்.

“அப்பச்சன்எடுத்திருப்பாரோ?”என்று கேட்டான் சூரஜ்.

“ம்ம்ம், இருக்கலாம்!” என்றார் அம்மச்சி.

“நாம மூன்று புத்திசாலித்தனமான பொறிகளை அமைக்கணும்!”

“கண்டுபிடிக்க ஒரே ஒரு வழிதான் இருக்கு” என்றார் அம்மச்சி.

“ஓ, என்னது?”

“ஹாஹா! ம்ம்ம்!”

“முதல்ல, இன்னும் கொஞ்சம் உண்ணியப்பங்கள் தேவை.”

”ஆனா எல்லாம் தீர்ந்து போச்சு, இல்லையா?”என்று கேட்டான் சூரஜ்.

“இல்லை, இப்படி அவசரத்தேவை வரும் என்றுதான்கொஞ்சத்தை சமையலறையில்ஒளித்து வைச்சிருக்கேன்”என்றார் அம்மச்சி.

“நம்ம முதல் பொறி அந்தபுனுகுப் பூனைக்கு” என்றார்அம்மச்சி. “அது சன்னல்வழியாக வரும்போது, நேராஇந்தக் கூடைக்குள் விழும்.அதோட பளுவால் இந்த மூடிடபக்குன்னு மூடிடும்.”

“அற்புதம்!” என்றான் சூரஜ்.

“இந்தப் பொறி பென்னிக்கு. அவள் உண்ணியப்பத்தை தின்னப்பார்த்தால், படால்னு இந்த வாளிக்கு அடியில் மாட்டிக் கொள்வாள்.”“சூப்பர்!” என்றான் சூரஜ்.

“இந்த இரகசிய கேமரா அப்பச்சனைக் கையும்களவுமாகப் பிடித்துவிடும்” என்றார் அம்மச்சி. “அவர் உண்ணியப்பத்தை தட்டிலிருந்து எடுத்ததும்இந்தக் கயிறு நழுவி கேமராவை இயக்கும்.”

“அறிவோ அறிவு!”என்றான் சூரஜ்.

“இப்போ நாம காத்திருக்கலாம்.”

ஒரு மணி நேரம் கழிந்தது. அம்மச்சி தனது சாய்வு நாற்காலியில்உட்கார்ந்து, தனக்கு விருப்பமான அறிவியல் புத்தகத்தைப் படித்துக்கொண்டிருக்கையில், சூரஜ் வேகமாக ஓடி வந்தான். “அம்மச்சி! வாங்க, வந்து பாருங்க! பொறிகள் எல்லாம் விழுந்திருக்கு!”“அப்படியா! பார்க்கலாம் வா!” என்றார் அம்மச்சி.

“ஆனா, உண்ணியப்பங்கள்எல்லாம் காணாமபோயிடுச்சே!” என்றார்அம்மச்சி. “மறுபடியும்!”

“அட! கூடைப் பொறிகாலியாக இருக்கு!”

“வாளிப் பொறியும் காலி! எப்படி?”

“கேமராவும் படம்எடுக்கலையே!”

“கெட்டிக்காரத் திருடன்தான்” என்றார் அம்மச்சி.“நாம் இன்னும் மூன்று பொறிகள் அமைக்கணும் போலிருக்கே!”

“ஆமாம்!” என்றான் சூரஜ்.

“ஆனால் பொறி அமைக்க இரை வேண்டுமே!”

“இன்னும் மூணு உண்ணியப்பங்கள்ஓவன்ல இருக்கு, இல்லையா?” என்றான் சூரஜ்.

“ஆஹா!” என்றார் அம்மச்சி. “இருந்தாலும் சாமர்த்தியம் போதாது, சரிதானே?”

“என்ன? என்னசொன்னீங்க?”என்றான் சூரஜ்.

“இன்னும் மூணு உண்ணியப்பங்கள் பாக்கி இருப்பது உனக்கு எப்படித் தெரியும் சூரஜ்?” என்று கேட்டார் அம்மச்சி. “அதுவும், ஓவன்ல ஒளிச்சு வைச்சிருக்குன்னு எப்படித் தெரியும்?

“ஆ … அது… நான்… ம்ம்ம்… ஓ …”

“பொறிகள் எப்படி வேலை செய்யும்னு நான்யாருக்குமே சொல்லலை. அப்போ, நீதான்மாட்டிக்காம அதையெல்லாம் விழ வைச்சிருப்ப!”

“சரி, சரி!” என்றான் சூரஜ். “நீங்க என்னைப் பிடிச்சுட்டீங்க! நான்தான் உண்ணியப்பத் திருடன்!”

“எனக்குத் தெரியும்!”என்றார் அம்மச்சி.

“ஈஈஈ… அந்த உண்ணியப்பங்கள்ரொம்ப ரொம்ப ருசியா இருந்துச்சு,அம்மச்சி. சாப்பிடுறத நிறுத்தவேமுடியல!” என்றான் சூரஜ். “நீங்க எவ்வளவு நல்லா சமைக்கிறீங்க!”

“ஹாஹாஹா! ரொம்பப் புகழாதே!”என்றார் அம்மச்சி.

“பாக்கியிருக்கும் உண்ணியப்பங்கள் யாருக்கு, அம்மச்சி?”

“ஹாஹாஹா! ஆளுக்குப் பாதி சாப்பிடலாம், வா!”

“அய்யோ! உண்ணியப்பங்களைக்காணோம்! மறுபடியும்ம்ம்ம்!”

“ஹீஹீஹீ!”

*ஞம் -ஞம்*

*கருக் -மொறுக்*

*மச்சக் -மச்சக்*

*சப் -சப்*

*டக -டக -டக*

திருடரைப் பிடிப்பது எப்படி:

1. தடயங்களைத் தேடுங்கள்!

2. சந்தேகத்துக்குரிய நபர்களைப் பட்டியலிடுங்கள்!

3. பொறிகளை அமையுங்கள்!

4. புத்திசாலித்தனமான கேள்விகளைக் கேளுங்கள்!

5. கண்டுபிடித்த அனைத்தையும் எழுதுங்கள்!

6. முக்கியமாக சந்தேகத்துக்குரியவரைப் பிடியுங்கள்!

7. தவறான நபரைப் பிடித்துவிட்டீர்களா? போச்சு!

8. மீண்டும் 1 முதல் 7 வரை எல்லாவற்றையும் செய்யுங்கள்!