ammuvin naaykkutti

அம்முவின் நாய்க்குட்டி

அம்முவுக்கு நாய்க்குட்டி வளர்க்க ஆசை. ஆனால், அவளிடம் நாய்க்குட்டி இல்லை. ஆகவே, அவள் எல்லாரிடமும் தான் ஒரு நாய்க்குட்டி வளர்ப்பதாகப் பொய் சொன்னாள். அந்த நாய்க்குட்டியின் பெயர் சங்கர் என்றாள், அதற்கு வாழைப்பழம் பிடிக்கும் என்றாள்... இப்படி ஏதேதோ கற்பனைகளைச் சொன்னாள். இதையெல்லாம் கேட்ட அவளுடைய நண்பர்கள், அம்மு வீட்டுக்கு வந்து அந்த நாய்க்குட்டியைப் பார்க்க விரும்புகிறார்கள். இப்போது, அம்மு என்ன செய்வாள்?

- N. Chokkan

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

அம்மு வீட்டில் நாய்க்குட்டி எதுவும் இல்லை.ஆனால், தான் ஒரு நாய்க்குட்டி வளர்ப்பதாக அவள் வகுப்பில் எல்லாரிடமும் சொன்னாள்.

‘என் நாய்க்குட்டியின் பெயர் சங்கர்’ என்று வேணுவிடம் சொன்னாள் அம்மு.‘சங்கர் கருப்பு நிறத்தில் அத்தனை அழகு!’ என்று குமாரியிடம் சொன்னாள்.‘சங்கருக்கு வாழைப்பழம் ரொம்பப் பிடிக்கும்’ என்று அப்துலிடம் சொன்னாள்.‘சங்கரும் நானும் பந்து விளையாடுவோம்’ என்று உன்னியிடம் சொன்னாள்.

இதையெல்லாம் கேட்ட வேணுவும் அப்துலும் குமாரியும் உன்னியும் சங்கரைப் பார்க்க விரும்பினார்கள். ’நாங்கள் உன் வீட்டுக்கு வரலாமா?’ என்றார்கள்.‘ம்ஹூம், முடியாது!’ என்றாள் அம்மு.

‘ம்ஹூம், முடியாது!’ என்றாள் அம்மு.‘ஏன்?’‘நாங்கள் இன்றைக்கு வெளியே செல்கிறோம்!’

மாலையில், வேணு, அப்துல், குமாரி, உன்னி நால்வரும் வந்தார்கள்.‘நீ ஏன் இன்று பள்ளிக்கு வரவில்லை?’ என்று கேட்டான் உன்னி.’எனக்கு உடம்பு சரியில்லை’ என்றாள் அம்மு.

அம்முவுக்கு ஒன்றும் புரியவில்லை. படுக்கையிலிருந்து எழுந்து வெளியே ஓடினாள்.

’ஆனால், அவனுக்கு வாழைப்பழம் மிகவும் பிடித்திருக்கிறது’ என்றாள் குமாரி.‘நான் சொன்னேன் பார்த்தாயா’ என்று மகிழ்ச்சியாகச் சிரித்தாள் அம்மு.