ஒரு சிறிய வீட்டில் தாத்தா, பாட்டி, பேரன் அமுதன் வசித்து வந்தார்கள்.அமுதன் தாத்தாவையும்,பாட்டியையும் வெளியில் அழைத்தான்.
அது என்ன இடம் என்று பார்த்தால் அது ஒரு பூங்கா.அங்கு தான் அழைத்துச் சென்றான். முதலில் படகில் பயணத்தை மேற்கொண்டனர்.
படகில் செல்லும்போது ஆஆ! மீன் அழகாக இருக்கிறதே! என அதனை ரசித்துப்
பார்த்தான்.
மீனைப் பார்த்துக்கொண்டே தண்ணீரில் கை வைத்துக்கொண்டு விளையாடினான். தாத்தா அனைத்தையும் கவனித்து வந்தார்.
இருந்தாலும் அமுதனுக்கு நினைப்பெல்லாம் அந்த மீனின் மீதே தான் இருந்தது.
மஞ்சள் வண்ண பெரிய மீனாயிற்றே!
பிறகு தண்ணீரில் சற்று நேரம் விளையாடி விட்டு செல்லலாம் என்று நீச்சல் அடித்தான்.பிறகு வீட்டிற்குச்செல்லலாம் என அமுதனே கூறினான்.
வீட்டிற்குச் சென்றவுடன் பாட்டி அமுதனுக்கு சாப்பிட உப்புமா செய்துக் கொடுத்தாள். அமுதன் உண்டு கொண்டெ அங்கு நடந்த நிகழ்வுகளைப் பற்றியே பேசினான். தாத்தாவும், பாட்டியும் புன்னகைத்துக் கொண்டே கேட்டார்கள்.