ரொம்ப ரொம்ப நாளைக்கு முன்ன, மக்கள் யாருக்கும் எதுவுமே தெரியாம இருந்தது. பயிர் வளர்க்கவோ, துணி நெய்யவோ, இரும்புல கருவிகள் செய்யவோகூட யாருக்கும் தெரியாது.
ஒரு நாள், ந்யாமே அறிவின் பானைய அனான்சிகிட்ட கொடுக்கலாம்னு முடிவு பண்ணார்.ஒவ்வொரு முறை அந்தப் பானைய திறந்து பார்க்கும்போது அனான்சி புதுசா ஏதாவது கத்துப்பார். அதில ரொம்ப உற்சாகமா இருந்தார்!
பேராசைக்கார அனான்சி, இந்தப் பானைய உயரமான மரத்துமேல வைச்சுகிட்டா, இந்த அறிவு முழுக்க எனக்கே எனக்கா இருக்கும் அப்படின்னு நினைச்சார். நீளமா ஒரு கயிறப் பிண்ணி, அந்த மண்பானைய வயித்தோட கட்டிகிட்டார்.மாரம் ஏற ஆரம்பிச்சதும், அந்த பானை அவரோட முட்டியில இடிக்க இடிக்க, மரம் ஏறுறது கஷ்டமாகிடுச்சு.
மரத்தடியில இருந்து அனான்சியோட சின்னப் பையன் இதையெல்லாம் பார்த்துகிட்டு இருந்தான். “அந்தப் பானைய பின்னால கட்டிகிட்டா இன்னும் கஷ்டமில்லாம ஏறலாம்ல?” அப்படின்னு கேட்டான்.அனான்சி அறிவு நிறைஞ்சிருந்த அந்த களிமண் பானைய பின்னாடி கட்டிகிட்டு ஏறிப் பார்த்தார். உண்மையிலே ரொம்ப சுலபமா இருந்துச்சு.
கடகடன்னு மர உச்சிக்கு ஏறிட்டார். அப்புறம்தான் யோசிச்சார். “என்கிட்டதான் எல்லா அறிவும் இருக்கணும், ஆனா என் பையனே என்னவிட புத்திசாலியா இருக்கான்.”
அனான்சி கோபமாகி அந்த பானைய மரத்துமேல இருந்து கீழப் போட்டார்.
அது கீழ விழுந்து தெறிச்சிடுச்சு. அந்த அறிவு முழுக்க எல்லோரும் எடுத்து பகிர்ந்துகிட்டாங்க.
இப்படித்தான், மக்கள் பயிர் விளைவிக்கவும், துணி நெய்யவும், இரும்புல கருவிகள் செய்யவும், இன்னமும் நமக்கு இப்போ தெரியிற எல்லா விஷயங்களையும் தெரிஞ்சிகிட்டாங்க.