வணக்கம்! என் பெயர் ஆனந்த்.
இங்குள்ள வீடுகளில் இருந்து குப்பைகளைச் சேகரிப்பதுதான் என்னுடைய வேலை.
நான் தாமதமாகச் சென்றால், திருமதி. மாஸ்கரேன்யாஸுக்குக் கடும் கோபம் வரும்.
உன்னி அங்க்கிள் குப்பையை ஒன்று விடாமல் பொறுக்கச் செய்வார்.
அனிதா ஆன்ட்டியால் குப்பையின் நாற்றத்தைத் தாங்கிக்கொள்ளவே முடியாது!
நான்காவது குறுக்குத் தெருவில் இருக்கும் புதிய குடும்பத்தினர் அன்பானவர்கள். ஆனால் அவர்களது நாய் அப்படியில்லை!
ஐயோ! இதைச் சுத்தம் செய்ய நிறைய நேரம் ஆகுமே!
எனக்கு சலீமின் தெருவுக்குச் செல்ல மிகவும் பிடிக்கும்.
சலீமும் நானும் நண்பர்கள்.
அவனுக்கு ட்ரம்ஸ் வாசிக்கப் பிடிக்கும். எனக்கு நடனம் ஆடப் பிடிக்கும்.
நேரமாகிவிட்டது!
டாட்டா!