கிராமத்தில் இருக்கும் பாட்டி வீட்டிற்கு செல்வது எங்களுக்கு மிகவும் பிடிக்கும்.
அங்கு அவரது தோட்டத்திலே ஒரு பெரிய மாமரம் இருக்கிறது. நிறைய பறவைகள் அதில் கூடும்.
எனக்கு அதில் ஒளிந்து விளையாட மிகவும் பிடிக்கும். என்னை யாருக்குமே கண்டுப்பிடிக்க முடியாது.
அப்பா கிணற்றின் அருகே என்னை தேடுவார். அம்மா மாட்டு தொழுவத்தில் என்னை தேடுவார். யாருக்கும் என்னை கண்டுப்பிடிக்க முடியாது.
லொள்்லொள் !! ஹோ ஹோ! கடைசியில் பாட்டியின் செல்ல நாய் என்னை கண்டு பிடித்து விட்டது.
ஹூம். நான் உடனே கீழே இறங்கி வர வேண்டுமே! மெல்ல இறங்கி வந்தேன். அங்கு வந்த பாட்டி என்னை வாரி அணைத்து முத்திட்டமிட்டார்.