animals in my street

எங்கள் தெருவின் பிராணிகள்

சோமு , ராமு மற்றும் ராணி ஆகியோர் 'வண்ணமயான தெருவில்' ஒன்றாக பல விஷயங்களைக் கண்டுபிடித்தனர். இந்த இரண்டாவது புத்தகத்தில், மூன்று நண்பர்களும் விளையாடத் தொடங்கினர். அவர்கள் பல விலங்குகளை சந்திப்பார்கள் என்று அவர்களுக்குத் தெரியாது. அவர்களையும் சந்திக்க விரும்புகிறீர்களா?

- அனந்த ரா. நவநீதகோபாலன்

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

சோமு , ராமு  மற்றும் ராணி  விளையாட வந்தனர்.

அங்கே ஒரு குட்டி பூனையைக் கண்டனர்

அது பெரிய எலி ஒன்றை பார்த்துக் கொண்டு இருந்தது.

"அங்கே பாருங்கள்" என்றான் சோமு

ராணி ஒரு சின்ன எறும்பு எலியை நோக்கி போவதைக் கண்டாள்

திடீரென அங்கே பெரிய நிழல் எல்லோரிடமும் விழுந்தது

மிகப் பெரிய கழுகு ஒன்று கீழே பறந்து வந்து சுவற்றில் உட்கார்ந்து.,

சின்ன எறும்பு, குட்டி பூனை, பெரிய எலி , மிகப்  பெரிய கழுகு அனைத்தும் ஒரே தெருவில் ஒன்றுகூடியது.

இப்போது அந்த மூன்று புத்திசாலி சிறார் என்ன செய்வார்கள்?

அவர்களின் குட்டி கைகளால் தட்ட தொடங்கினார்.

உடனே அந்த கழுகு தன்  பெரிய இறகை விரித்து பறந்து  போனது.

ராணி ஒரு இலையில் அந்த எறும்பை ஏற்றினால். பின் அதை சுவற்றின் அருகில் விட்டு வந்தாள்.

அங்கே சக்கரை கட்டி இருந்ததை எறும்பு கண்டது. அதை எடுத்துக்கொண்டு அதன் வீட்டிற்கு சென்றது.

பெரிய எலி தெருவில் விட்டுச் சென்ற ரொட்டித்துண்டினை எடுத்துக்கொண்டு அதன் வாய்க்கால் வீட்டிற்கு விரைந்து சென்றது.

சோம்பல் முறித்த குட்டிப்  பூனை "மியாவ்" எனச்  சத்தமிட்டவாறே காலை நக்கி புரண்டது.

ராமு அதற்கு ஒரு கிண்ணம் பாலினை கொடுத்தான்.

பின் மூன்று பேரும் விளையாடத்  தொடங்கினர்.

இதை மரத்தில் இருந்து பார்த்த கழுகு பின் பறந்து சென்றது.