annanin sakkara naarkali

அண்ணனின் சக்கர நாற்காலி

வாருங்கள், துர்வா, த்ருபோ மற்றும் த்ருபோவின் சக்கர நாற்காலியைச் சந்திக்கலாம். இந்த அண்ணனும் தங்கையும் பூங்கா, கடைத்தெரு என ஊர்சுற்றி மகிழ்ச்சியாக விளையாடுகிறார்கள். அண்ணன் தங்கையென்றால் அப்படித்தானே!

- Anitha Ramkumar

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

ஊஊஊஊஊஊ!

இது நானும் சக்கர நாற்காலியில் இருக்கும் என் அண்ணனும்! எங்களைப் பார்த்து ஊரே சொல்லும் இருவரும் சேர்ந்துவிட்டால் அட்டகாசம்தான்!

பச்சை, மஞ்சள், சிவப்புன்னு சக்கரத்திலே வண்ணம் தீட்டுவான். அது போதாதுன்னு பலூனை ஊதி வண்டி முழுக்கக் கட்டுவான்.

அண்ணன் ரொம்ப சுட்டி, மூளையோ படு கெட்டி மழைக் காலத்தில் எனக்கு குட்டைகள் கடக்க உதவுவான்!

மாலை வந்ததும் விளையாட பூங்கா செல்வோம் நேராக ஹாரன் எழுப்பி அனைவரையும் வழிவிடச் செய்வான் எங்களுக்கு.

அண்ணனுடன் கடைத்தெருவிற்குச் செல்வது ஜாலி சக்கர நாற்காலியின் பின்புறக் கண்ணாடியில் பார்ப்பதே என் ஜோலி.

சிலசமயம் சக்கர நாற்காலியில்செல்வான் ஆழமில்லாத நீரோடைக்கு! தண்ணீரை நான் வாரித் தெளிக்கசிரி சிரின்னு சிரிப்பான் சத்தமாக!

அம்மாவும் அப்பாவும் எங்களை கூட்டிப்போவாங்க மலையேற! அப்போ மாட்டிடுவான்சக்கரநாற்காலியில் வேறு சக்கரம் மலையேறும் பைக்கைப் போல!

சக்கர நாற்காலியில் சவாரி செய்யக் காத்திருக்கும் நண்பர்களோ நிறைய! கைகளை விரித்துக்கொண்டு போகும்போது அவ்வளவு நல்லா கழியும் பொழுது!

வேகமாகச் செல்வான் என் அண்ணன்ஊரில் அவன் பெயர் சக்கர நாற்காலி சாம்பியன்!இப்போ தெரியும் எங்கள் நண்பர்கள் எல்லோருக்கும்...

அவங்க வீட்டு வாசலில் ஒரு சரிவுப்பாதை இருக்கணும்னு!