அனு பல விஷயங்களைப் பார்க்க விரும்புகிறாள்,
பெரியவை, சிறியவை,
மலை மேல் இருக்கும் வீடுகள்
சுவர் மேல் செல்லும் எறும்புகள்.
சமயல் அறையில் உள்ள சாதனங்கள்,
அலமாரியில் உள்ள பொருள்கள்,
தோட்டத்தில் உள்ள விஷயங்கள்,
தனக்கு மேல் ஊர்ந்து செல்லும் உயிரினங்கள்.
அனு எல்லா இடங்களிலும்
வடிவங்களைப் பார்க்கிறாள்,
ஒன்று விடாமல் எல்லாவற்றையும் பார்க்கிறாள்!
கரும்புள்ளி வண்டின் மேலுள்ள புள்ளிகள்,
மரங்களில் உள்ள வட்டங்கள்,
மனிதர்கள் உருவாக்கிய கட்டடங்கள்,
தேனீக்கள் உருவாக்கிய அமைப்புகள்.
இலையில் உள்ள கோடுகள்,
அவளது கையில் உள்ள ரேகைகள்,
ஈரமான கடலோர மணலில்
தன் பாதத்தின் தடங்கள்.
தண்ணீரில் அலைகள்,
தன் கூந்தலில் அலைகள்,
மரத்தின் தண்டுகளில் உள்ள காளான்கள்,
வானில் பறக்கும் பறவைகள்.
அவளைப் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லும்
புத்தகத்தில் உள்ள வார்த்தைகள்,
புது நிறங்கள்,
புதுக் கதைகள், புது முகங்கள்
அவளுக்கு மிகவும் பிடித்த
சிவப்பு நிறம் கொண்ட பொருள்கள்!
அவள் தம்பியின் தலையில் உள்ள
மூன்று சுருட்டை முடி.
அப்பா சுட்ட இனிப்பு அப்பததின் (கேக்) மேல்
தூவிய வண்ண அலங்காரங்கள்,
தூரத்தில் இருந்து அவளைப் பார்க்கும்
நட்சத்திரங்களைப் போல் மின்னுகின்றன.
முயல்கள் வடிவம் கொண்ட மேகங்கள்,
வானில் உயர மிதக்கின்றன.
நிழலில் உள்ள யானைகளே,
வாருங்கள், வந்து முயற்சி செய்யுங்கள்!
அனு அவள் பார்க்கும் விஷயங்களைக் கண்டு
மகிழ்ச்சி அடைகிறாள்.
அனு பார்ப்பதை
நீங்களும் பார்க்கிறீர்களா?