appuvin aasai

அப்புவின் ஆசை

ஒரு யானையின் வினோத ஆசையும் அதன் விளைவுகளையும் பற்றிய கதை.

- Ajith Kumar

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

மிருகக்காட்சி சாலையில் வாழ்ந்து வந்த அப்பு என்ற யானைக்கு மிகவும் கவலை. தான் மட்டும் கருப்பாக இருப்பதால் எப்போதும் சோகாமாகவே இருந்து வந்தது.

இதைப் பார்த்த சிவா என்ற புலி, “ என்ன அப்பு என்ன ஆச்சு?” என்று கேட்டது.  “நான் மட்டும் கருப்பாக இருக்கிறேன். நீங்கள் எல்லோரும் அழகாக இருக்கிறீர்கள்.” என்றது அப்பு.

“இந்தா என் வரிகளை எடுத்துக்கொள்!” என்று கூறி தன் உடலில் உள்ள வரிகளை அப்புவிடம் கொடுத்தது சிவா. அப்புவுக்கு ஒரே சந்தோசம்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த மயில் தனது வண்ணங்களை அப்புவுக்கு கொடுத்தது. குயில் தனது குரலைக் கொடுத்தது.

அப்பு மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்து “கூகூ” என்று ஆடியது.

மிருகக்காட்சி சாலைக்கு வந்த குழந்தைகள் அப்புவை அடையாளம் தெரியாமல் “அப்பு எங்கே? அப்பு எங்கே?” என்று தேடினர். அப்புவுக்கு மீண்டும் வருத்தம் ஏற்பட்டது. தன் தவறை உணர்ந்து பழைய அப்புவாக மாறியது.