arippu arippu arippu

அரிப்பு! அரிப்பு! அரிப்பு!

மனுவுக்கு குதிப்பதும், எண்ணுவதும் மிகவும் பிடிக்கும். ஆனால் அவளுக்கு இந்த அரிப்பெடுக்கும் சின்னம்மை வந்ததிலிருந்து ஒரே அரிப்பு, அரிப்பு தான்! அவள் சொறியாமல் இருக்க என்ன செய்தாள்?

- Bhuvana Shiv

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

தினமும் பள்ளி முடிந்த பின், மனு பாண்டி விளையாடுவாள்.

குதித்துக் கொண்டே எண்ணுவாள்.

ஒன்று, இரண்டு, மூன்று.

நான்கு, ஐந்து, ஆறு.

ஏழு, எட்டு, ஒன்பது, பத்து.

ஆனால் இன்று அவளது வயிற்றுப் பகுதியில் ஒரே அரிப்பு.

குதித்துக் கொண்டே எண்ணத் தொடங்கினாள்.

ஒன்று, இரண்டு, மூன்று.

அரிப்பு!

நான்கு, ஐந்து, ஆறு.

அரிப்பு!அரிப்பு!

ஏழு, எட்டு, ஒன்பது, பத்து.

அரிப்பு! அரிப்பு! அரிப்பு!

அரிக்கும் இடத்தில் குட்டி குட்டியாய்

இருக்கும் கொப்புளங்களைப் பார்த்தாள்.

ஒன்று இரண்டு மூன்று.

அவள் வயிற்றின் மேல்!

நான்கு ஐந்து ஆறு.

அவள் கைகளில்!

ஏழு எட்டு ஒன்பது பத்து.

அவள் முதுகிலும்!

உடம்பெல்லாம் அரிப்பாய்

அரிக்கும் சின்னஞ்சிறு

கொப்புளங்கள்!

‘‘உனக்கு சின்னம்மை வந்திருக்கு!

நீ பள்ளிக்கூடத்துக்கு போக முடியாது!’’

என்றாள் அம்மா.

மனு ‘தொப்’பென்று படுக்கையில் விழுந்தாள்.

சொறி! சொறி! சொறி!

சொறி! சொறி!

சொறி!

“சொறியாதே!” என்றாள் அம்மா.

சொறிந்ததால் மனுவுக்கு

நமைச்சல் மேலும் அதிகரித்தது!

அம்மாவும் அப்பாவும் பார்க்காத போது, சொறிந்து கொண்டாள்!

கஞ்சி குடித்த பின்பும் அரிப்புத் தாங்காமல் சொறிந்து கொண்டாள்!

“சொறியாதே!”

அம்மாவும் அப்பாவும்

சேர்ந்து கூச்சலிட்டனர்.

ஆனால் மனு படுக்கையில் படுத்த பின்பும் சொறிந்து கொண்டாள்!

சொறி!

சொறி! சொறி!

சொறி! சொறி!

சொறி!

சொறியாமலிருக்க முயற்சி செய்கிறாள் மனு.

பாம்பு ஏணி ஆட்டம் விளையாடுகிறாள்.

அவளுக்கு விருப்பமானவற்றை எல்லாம் கற்பனை செய்கிறாள்.

சொறிந்து கொள்ள மறந்தே போகிறாள்!

மெதுவாக கொப்புளங்கள் மறைகின்றன.

மனு எண்ணத் தொடங்குகிறாள்.

பத்து, ஒன்பது, எட்டு, ஏழு, ஆறு, ஐந்து , நான்கு, மூன்று, இரண்டு, ஒன்று.

ஒரு நாள் சட்டையைத் தூக்கி பார்த்தாள் மனு.

எல்லாக் கொப்புளங்களும் மறைந்து போயிருந்தன!

இப்போது மனு பாண்டி ஆடலாம்.

குதித்துக் குதித்து எண்ணலாம்.

ஒன்று, இரண்டு, மூன்று.

நான்கு, ஐந்து, ஆறு.

ஏழு, எட்டு, ஒன்பது, பத்து.