aththaiyum naanum

அத்தையும் நானும்

சுட்கு தனது அத்தையுடன் நடை போய்விட்டு வருகிறான். அவனது பைகளில் பல அரிய செல்வங்களும் அவற்றைப் பற்றிய கதைகளும் நிறைந்திருக்கிறன. ஒரு குழந்தையின் பார்வையில் கூறப்பட்ட, அத்தைக்கும் மருமகனுக்கும் இடையிலான அழகிய உறவைப் பற்றிய கதை இது.

- S. Jayaraman

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

நடந்து செல்வது எனக்குப் பிடிக்கும். அதிலும் என் அத்தையுடன் நடந்து செல்வது ரொம்பப் பிடிக்கும்.

அத்தை என் கையைப் பிடித்துக்கொண்டு வருவது எனக்குப் பிடிக்கும். அவர் என் கையை விட்டுவிடும் போதோ... இன்னும் ரொம்பப் பிடிக்கும்.

நாங்கள் வேகமாக நடக்க மாட்டோம். அடிக்கடி நின்று ஹலோ சொல்லுவோம்…

ஒரு நாய்க்கு, ஒரு பூனைக்கு, ஒரு எலிக்கு, ஒரு காக்காவுக்கு, ஒரு மரத்துக்கு.

அத்தைக்கு தெருவில் பூக்களைப் பொறுக்குவது பிடிக்கும். எனக்கு கற்களைப் பொறுக்குவது பிடிக்கும். பெரிய கற்கள், சின்ன கற்கள், வட்டமானவை, தட்டையானவை.

ஆனால் இவற்றில் இருப்பதிலேயே சின்னவைதான் சிறந்தவை. என் பைக்குள்ளேயே தொலைந்துவிடும் அளவுக்கு, மிகமிகச் சின்னவை.

அத்தையுடன் நடந்துவிட்டு வந்தபின் என் பைகள் நிரம்பி இருக்கும்.

இன்று, பாட்டி அவரது கூடையிலிருந்து ஒரு பட்டாணிக்காய் கொடுத்தார்.

திலீப் அண்ணா அவரது மாயாஜாலக் கடையிலிருந்து

இந்த கவ்வியைக் கொடுத்தார்.

நிர்மல் அக்கா நான் அமைதியாக... அமைதியாக... காத்திருந்ததற்காக இந்த ஸ்டிக்கரைக் கொடுத்தார்.

அன்ஜும் ஆன்ட்டி அவருடைய பெரிய பொத்தான் ஜாடியிலிருந்து இந்த பொத்தானைக் கொடுத்தார்.

வீட்டுக்கு வந்ததும், என் பைகளில் இருக்கும் எல்லாவற்றையும் எடுத்து என் மஞ்சள் பெட்டியில் போட்டு வைத்துக்கொள்வேன்.

என் பையில் அந்த சின்னக் கல்லை கண்டுபிடித்தால், அதை என் அத்தைக்குக் கொடுப்பேன்.