காடுகளில் எதுவும் வீணாகப்
போவதில்லை. சிறிதளவு கூட!
எல்லாம் சுத்தம் செய்யப்பட்டு விடும். அத்தனையும்!
சிறுத்தைப் புலிகள் தமது இரையைச் சாப்பிட்டு முடிக்காத போது,
மிச்சத்தைச் சாப்பிடுவது யார்?
கழுகுகளும், கழுதைப்புலிகளும்!
மற்றும் பசியுடன் இருக்கும் காட்டுப் பன்றி.
ஹ்கொர்! ஹ்கொர்!
கழுகுகளும் கழுதைப்புலிகளும் தம் இரையை
மிச்சம் வைக்கும் போது, அதை விழுங்குவது யார்?
ஈக்களும், புழுக்களும்!
மற்றும் பசியுடன் இருக்கும் காட்டுப் பன்றி.
ஹ்கொர்! ஹ்கொர்!
காடுகளில் யானைகள் சாணம் இடும் போது,
அதைக் கொறிப்பது யார்?
சாண வண்டுகள்!
மற்றும் பசியுடன் இருக்கும் காட்டுப் பன்றி.
ஹ்கொர்! ஹ்கொர்!
கிளைகளும், இலைகளும், மழையும் நிலத்தில் விழும் போது,
அந்த விருந்தை உண்பது யார்?
கரையான்களும், காளான்களும்!
மற்றும் பசியுடன் இருக்கும் காட்டுப் பன்றி.
ஹ்கொர்! ஹ்கொர்!
புகையினால் காற்று மாசாகும் போது,
அதை உறிஞ்சிக் கொள்வது யார்?
மரங்கள்!
உம்ம்ம்...!
ஆனால் பசியுடன் இருக்கும் காட்டுப் பன்றி இல்லை.
ஹ்கொர்! ஹ்கொர்!