avasaram kollathe

அவசரம் கொள்ளாதே.

மறைந்து போன மந்திரக்கல் மீண்டும் கிடைத்தது.

- R. Saravanan

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

ஒரு நாள் ஒருவன் தன் வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்தான்.

அப்போது அதுவரை கண்டிராத ஒரு புத்தகத்தை அவன் பார்த்தான்.

அந்த புத்தகம் மிக பழமையானது.

அந்த புத்தகத்தில் சில மாய மந்திரங்கள் அடங்கியுள்ளது.

அதில் ஒரு கருங் கூழாங்கல்லை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.அந்த கல்லால் எதை தொட்டாலும் அது தங்கமாக மாறிவிடும்.

அந்த கல்லைத் தேடி அலைந்தான்.

அலைந்து போன அவன் வெறுப்படைந்து மந்திரக் கல் மீது கவனம் குறைந்தது.

கடைசியில் அந்த கல் ஒரு கடற்கரையில் இருந்தது. அதை வெறும் கையால் தொட்டான். உடனே அந்தக் கல் மாயமாக மறைந்து போனது.

அப்போதுதான் அவனுக்கு ஞாபகத்திற்கு வந்தது.

'வெறும் கையால் அந்த மந்திரக் கல்லை தொட்டால் அது உடனே மறைந்துவிடும்' என்று எழுதி இருந்தது.