ராணியும் அவளது அம்மாவும் வெளியே செல்கிறார்கள். அம்மா நம்ம ரெண்டு பேரும் நல்லா அலங்காரம் பண்ணிக்கணும்னு சொல்லி இருக்கார்.
அம்மா ராணி குளிக்க உதவி செய்தார்.
அப்பறம் அம்மாவும் குளித்தார்.
அம்மா உடை அணிந்து வெளியே கிளம்பும்போது மிக நன்றாக இருப்பார்.
அம்மா போலவே நடக்க ராணி முடிவு செய்தாள்!
அம்மாவின் அறையில் இருக்கும் கண்ணாடி முன் நின்றாள்.
இன்று நான் ரொம்ப அழகா இருக்கணும்!
ராணி, அம்மாவின் உதட்டு சாயம் எடுத்து அப்பிக் கொண்டாள். எண்ணையைத் தலை முடியில் தேய்த்துக் கொண்டாள்.
இன்று நான் ரொம்ப அழகா இருக்கணும்!
தலை முடியைச் சீவி குடுமிகள் போட்டுக் கொண்டாள்.
இன்று நான் ரொம்ப அழகா இருக்கணும்!
களிம்பினை எடுத்து கன்னத்தில் அப்பிக் கொண்டாள். நெற்றி முழுவதும் பொட்டுகளை ஒட்டிக் கொண்டாள்.
இன்று நான் ரொம்ப அழகா இருக்கணும்!
கண்ணை சுற்றிலும் கண்மையைத் தீட்டினாள்.
இன்று நான் ரொம்ப அழகா இருக்கணும்!
அம்மாவின் மேஜையில் அவள் பார்த்ததை எல்லாம் எடுத்து முகத்தில் தடவிக் கொண்டாள்.
பாசிமணியை கழுத்தில் அணிந்து கொண்டாள். வளையல்களைக் கையில் போட்டுக் கொண்டாள்.
இன்று நான் ரொம்ப அழகா இருக்கணும்!
அம்மாவின் உடைகளையும், அப்பாவின் கண்ணாடியையும் அணிந்து கொண்டாள்.
இன்று நான் ரொம்ப அழகா இருக்கணும்!
"அம்மா! அம்மா பாருங்க என்னோட அலங்காரத்தை!
நான் இன்னைக்கு ரொம்ப அழகா இருக்கேன்லா?"
ராணியை தூக்கிக் கொண்ட அம்மா அவளது அலங்காரத்தைப் பார்த்து சிரித்தார்.
"ஆமா தங்கம், நீதான் என் அழகு குட்டிச் செல்லம்"