boothangal putthakam

பூதங்கள் புத்தகம்

அமாவாசையில் உங்கள் பெயரைச் சொல்லி அழைப்பது யார்? யாருமில்லை. யாரோவாக இருக்கலாம். இந்தப் புத்தகத்தைப் படித்தால் அதே குரல் கேட்கலாம். அப்படிக் கேட்டால், அப்புறம் அவ்வளவுதான்

- Vetri | வெற்றி

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

இருட்டிலும், அமாவாசையிலும் வெளியே திரிவது என்ன? மர உச்சியில் இருந்து ஊளையிடுவது, காற்றில் இருந்து உங்கள் பெயரை சொல்லிக் கூப்பிடுவது என்ன?

ஒன்றுமே இல்லாமல் இருக்கலாம். நீங்கள் எந்த ஊரில் இருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து, உங்கள் நம்பிக்கைகளைப் பொறுத்து, ஏதாவதும் இருக்கலாம்.

குளங்கள், ஆறுகளைச் சுற்றி கவனமாக இருங்கள். பாக் அங்குதான் வசிக்கிறது. அதன் கை கால்கள் முறுக்கிக் கொண்டிருக்கும். அதன் கண்களும் வாயும், அதன் வயிற்றில் இருக்கும்.

பாக்

பாக்கைப் பார்த்தால் கவலைப்படாதீர்கள். அது உங்களை பயமுறுத்த வரவில்லை, பச்சை மீனைத் திருட வந்திருக்கும்.

காச்

காச்

காச்

இரவில் வானத்தை நிமிர்ந்து பார்க்காதீர்கள். இருட்டில் ஜிலையா குருவிகளைப் போல பறக்கும். சூரியன் வந்ததும் தூங்கப் போய்விடும்.

ஜிலையா

ஜிலையாவை பார்த்தால், அதற்கு உங்கள் பெயர் தெரியாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அப்புறம் உங்கள் ரத்தத்தை உறிஞ்சிவிடும்.

ஷூப் ஷூப் ஷூப்

பனைமரங்களைச் சுற்றி கவனமாக இருங்கள். யட்சி அதில்தான் வசிப்பாள். நிலத்துக்கு மேலே மிதக்கும் அவளுக்கு எப்போதும் தாகம். தன்னிடம் மாட்டுபவர்களை வீட்டுக்குத் தூக்கிப் போவாள். அடுத்தநாள், மரத்தடியில் அவர்கள் எலும்புகள் கிடக்கும்

யட்சி

யட்சியைப் பார்த்தால், அவளை வீட்டுக்கு வராதே என்று சொல்லுங்கள்.

ஜல்   ஜல்   ஜல்

ரயில் தண்டவாளங்கள் அருகே நடக்கும்போது கவனமாக இருங்கள். ஸ்கோந்தோகதா அங்குதான் சுற்றும். கொடூரமாக அவன் தன் தலையை இழந்துவிட்டான். பாவம்! அதனால் தான் இழந்ததை இப்போது தேடிக் கொண்டிருக்கிறான்.

ஸ்கோந்தோகதா

ஸ்கோந்தோகதாவைப் பார்த்தால் அவன் உங்களையும் அவனது தலையைத் தேடச் சொல்வான்.

சூக்

சூக்

சூக்

ராண்டாஸ் பனிபடர்ந்த மலைகளில்தான் மாய மந்திரம் செய்வாள். கவனம். நீள கால் நகங்கள், முட்டி வரை கூந்தல், கால்கள் பின்பக்கமாய் திரும்பியிருக்கும்.

ராண்டாஸ்

ராண்டாஸ் கூப்பிட்டால் அவளோடு போகாதீர்கள். அப்புறம் திரும்பி வரமாட்டீர்கள்,

பிஷ்

பிஷ்

பிஷ்

பாலைவனத்தில் விழிப்பு முக்கியம். ரெட் ரோ ப்ரெட் அங்கே ஒளிந்திருக்கும். மணலை வைத்து தன்னை மாற்றிக்கொள்ளும். ஒருநாள் பழுப்பு மலையாக, மறுநாள் மணலில் அலையாக.

ரெட் ரோ ப்ரெட்

பாலைவனப் பயணம் போனால் பழுப்பும் மஞ்சளும் அணியாதீர்கள். இந்த மணல் ஆவி உங்களைத் தாக்கும்.

ஸ்ஸ்ஸ்

ஸ்ஸ்ஸ்

ஸ்ஸ்ஸ்

காட்டில் அசையும் வெளிச்சத்திடம் தள்ளியே இருங்கள். கொல்லி தேவா அங்கிருக்கும். அவன் கையில் மரக் கொல்லியை வைத்துக்கொண்டு ஆடுவான். பயணிகளைத் தொந்தரவு செய்வான்.

கொல்லி தேவா

கண்ணுக்குத் தெரியாத கை உங்கள் விளக்கை ஏற்றினால், கத்துங்கள், அப்புறம் ஓட்டம் பிடியுங்கள்.

சாம் சாம் சாம்

ஆமாம், இருட்டில் உங்கள் ஜன்னலுக்கு வெளியே கத்தி அழுவது என்ன?நீங்களே சொல்லுங்கள்!

ரத்தம் உறிஞ்சும் பறவையாக இருக்கலாம்.

பின்பக்கம் திரும்பிய கால்கள் உள்ள பெண்ணாக இருக்கலாம்.இல்லை, சும்மா காற்று கோபத்தில் இருக்கலாம்.

ஸ்கோந்தோகதா - மேற்கு வங்கம்

பாக் - அசாம்

ராண்டாஸ் - காஷ்மீர்

ரெட் ரோ ப்ரெட் - ராஜஸ்தான்

கொல்லி தேவா - கர்நாடகம்

யட்சி - கேரளா

இந்திய துணைக்கண்டத்தின் பேய் வரைபடம்

ஜிலையா - பீகார்