calling sounds

மணி ஓசை

சுட்டிக் குழந்தை ஒன்று தூங்கிட நினைக்கையில் அதனை சுற்றி எல்லாம் அழைப்பு மணி ஒலி பற்றிய புத்தகம் இது

- அனந்த ரா. நவநீதகோபாலன்

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

எப்போது நான் தூங்க நினைத்தாலும் ...

டிங்  டாங் ...

டிங்  டாங் ...

கதவு அழைப்புமணி ஒலிக்கும் !!..

நானும் புரண்டு படுத்துப் பார்ப்பேன் ..

மீண்டும்,

ஸ்ஸ்ஸ் .... ஸ்ஸ்ஸ் ...... ஸ்ஸ்ஸ்ஸ் ......

அலைபேசி  அதிரத்  தொடங்கும்....

திரும்ப ஒருமுறை தூங்கிட திரும்பிப் படுத்தேன்..

இந்த முறை, மிகச் சத்தமாக

டொய்ங்  டொய்ங் !!..

ட்ரிங்  ட்ரிங் ...

என்ன சத்தம் என்று எழுந்து பார்த்தேன்....

வாசலில் சென்ற

வண்டியின் பெல் சத்தம்..

"என்ன.....?"

என்றவாறே என்னை பார்த்தால் அம்மா

"இன்னும் தூங்கலாய என் செல்லக் குட்டி ?"

"இதனை சத்தத்தில்  எப்படி தூங்க ? "

என்பதை சொல்வது போல் கண்களை விரித்துக் காட்டினேன் ..

"டிங் , ஸ்ஸ்ஸ்ஸ்

டொய்ங் , ட்ரிங் !!"

அதனை சத்தமும்

சுத்தி ஒலித்திடும்

அறையில் எப்படி       தூங்குவேன்       சொல்லுங்க !!..