சிக்கிரி சக்கரி ப்ளம்ஸ் போல உருண்டையாம்! பூனை புல்லாங்குழல் ஊத எலி மத்தளம் கொட்டுது கொட்டுது.
இம்பளி கிம்பளி செக்கச்சிவந்த ரோசாப்பூ! எருமையோட தலைக்கு மேல பன்னி தாவுது பாரு பாரு.
எடக்கு மடக்கு தேத்தண்ணி கொதிக்கும் பானை! வேப்ப மரத்தைச் சுத்திச் சுத்தி பாங்ரா ஆடுது பசுமாடு.
தந்தனத் தந்தானா நவாப்பழம் இனிப்புதான்! கிழட்டுக் கிளிக்கு நாய்க்குட்டி கஸல் பாடிக் காட்டுது.
கருக்கு முறுக்கு விளையாட்டில் வினை வந்துச்சு! விவசாயி பாட்டிக்கிட்ட வசமா நாங்க மாட்டிகிட்டோம்.
படக்கு படக்கு அடிச்சுக்குது நெஞ்சு! எங்க ரகசியத்தை எல்லாம்பாட்டி உளறி வச்சா போச்சு. ஜிங்கரி ஜாங்கிரி தகதகக்குது சூரியன்! செருப்பை உதறிப் போட்டுட்டு
பாட்டியும் சேர்ந்து ஆட்டம் போட்டார்!