chikkoovumthaan

சிக்கூவும்தான்

நாள் முழுக்க பரபரவென்று பலவும் செய்யும் சிக்கூவைப் பார்க்கலாம், வாருங்கள்!

- Irulneeki Ganesan

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

சூரியன் காலையில் எழுகிறது. சிக்கூவும்தான்.

பூனைக்குட்டிகள் சாப்பிடுகின்றன. சிக்கூவும்தான்.

நாய்க்குட்டிகள் விளையாடுகின்றன. சிக்கூவும்தான்.

குருவிகள் குளிக்கின்றன. சிக்கூவும்தான்.

மயில்கள் ஆடுகின்றன. சிக்கூவும்தான்.

சூரியன் தூங்கப் போகிறது. சிக்கூவும்தான்.

நிலா சிரித்தவாறே எழுகிறது. கனவில், சிக்கூவும் சிரித்தபடியே எழுகிறான்.