chuppuk chappaak

சுப்புக் சப்பாக்

தினமும் பள்ளிக்குப் போகும்போது கங்கன் பல சத்தங்களைக் கேட்பான். கங்கன், ஒய்மிலி மற்றும் நண்பர்களோட நாமும் அதையெல்லாம் கேட்கலாம், வாங்க!

- Vetri | வெற்றி

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

“கங்கன், உன் ஷூ எங்கே?” என்று கேட்டாள் மிதிங்கா.

“எனக்கு ஷூ பிடிக்காது. எனக்கு ஷூ வேண்டாம். ஷூ போட்டா இப்படி செய்யமுடியாதே?”

சரக் சுரக் சிரக்!

“இப்படியும் முடியாது!” என்று ஒய்மிலியும் சேர்ந்துகொண்டாள். கூழாங்கற்கள் அவள் காலில் கிச்சுகிச்சு மூட்டின.

“ஆகா!” மணல் இதமாக வெதுவெதுப்பாக இருந்தது.

“அங்க பாரு!” மிதிங்கா ஓடையைச் சுட்டிக்காட்டினாள்.

“காலை வணக்கம், பினி மேடம்!”

“வாங்க வாங்க! இப்போதான் இந்த ஓடையோட குலு-குலு-குலு சத்தத்தைக் கேட்டுக்கிட்டு இருந்தேன்.”

“அப்படியே காற்றோட ஊஷ்-ஊ-ஊஷ் சத்தத்தையும் கேட்டீங்களா?” என்று கேட்டான் கங்கன்.

சுப்புக்

சப்பாக்

சுப்புக்

“இன்னிக்கு வகுப்பை வெளியில நடத்தலாமா, மேடம்?” என்று கேட்டாள் ஓய்மிலி. “ப்ளீஸ்?” என்று கங்கனும் அவளோடு சேர்ந்துகொண்டான்.

பினி மேடம் புன்னகைத்தார்.