கடவுளே, கேளுங்க,
விராட் நின்று ஆடணும் கோட்டில் கால் இருக்கணும்.
அவன் இல்லா ஆட்டம் அணியினருக்கு நஷ்டம் ரொம்ப ரொம்ப கஷ்டம் பாட்டி முதல் பேரன் வரை இந்தியாவே அழுதிடும்.
அப்புறம், நான்?
நான் நகத்தைக் கடிப்பேன் நாக்கையும் கடித்துக் கொள்வேன். பயத்தில் வயிறு கலங்கி ஓடுவேன் கழிவறைக்கு அடிக்கடி!
சொன்னா நம்ப மாட்டீங்க! விராட் எனக்கு அண்ணன்தான் அவன் அடிக்கும் சதம் எனக்கும் சொந்தம்தான்.
நான் பிஸ்கட் தின்னும் சத்தத்தால் நாற்காலி நகர்த்தும் சத்தத்தால் அம்மா கூப்பிடும் சத்தத்தால் அக்கா திட்டும் சத்தத்தால் விராட் தலை வலித்திடும் அவன் விக்கெட்டும் விழுந்திடும்!
பார்த்துகிட்டே இருங்க படிப்படியா மேலே போகும் நம் அணி கடைசியில் சறுக்கிடும் கோப்பையையும் தொலைத்திடும் நாடே சோகத்தில் மூழ்கிடும்!
ஆகவே, கடவுளே காப்பாற்றும் விராட் நின்று ஆடணும் கோட்டில் கால் இருக்கணும்!