'இதுவரையும் கரட்டை பச்சையாகவே சாப்பிட்டோம்...'
‘இன்று சமைத்துச் சாப்பிட வேண்டும்...’
முயலார் நினைத்தார்.
‘எப்படி சமைப்பது...?’
‘இந்த வீட்டில் உதவி கேட்போம்....’
“வவ்.... வவ்.....” அங்கிருந்த நாயார் துரத்த ஆரம்பித்தார்.
'அச்சோ....! இப்போது என்ன செய்வது...? ’
வெய்யிலில் வாட்டினார்.
அப்போதும் வேகவில்லை.
தீயில் சுட்டுச் சுவைத்தார்.
கைப்போ கைப்பு.
‘எப்படி சமைத்துச் சாப்பிடுவது..?’
முயலார் கடுமையாக யோசித்தார்.
ஆமையின் ஓடு ஒன்றைத் தேடி எடுத்தார்.
சுள்ளிகளைச் சேகரித்துக் கொண்டார்
கற்களும் கிடைத்தன.
முயலார் அடுப்பை மூட்டினார்
"சாப்பிட வாருங்கள்.....’’
முயலார் நண்பர்களைக் கூப்பிட்டார்.
எல்லோரும் சமைத்த கரட் கிழங்குகளை சுவைத்தனர்