நிஜ டக்கா இதுதான்
இந்த புத்தகம் டக்கா என்ற நாயின் உண்மையான கதை. அவள் பெங்களூருவில ஒரு தெருவில் அடிபட்டுக் கிடந்தா. அவ மீட்கப்பட்டு, ஒரு புது வீடும் அவளுக்குக் கிடைச்சுது. டக்கா இப்போ ரெண்டு மனிதர்கள், ரெண்டு பூனைகளோட ஒரு வீட்டில வசிக்கிறா.
டக்கா தனக்கு சிகிச்சை அளிச்ச விலங்குநல மருத்துவமனை மருத்துவர்களுக்கும் பணியாளர்களுக்கும் நன்றி சொல்றா. மோசமா சிதைந்த அவளோட மூத்திரக் குழாய், செரிமான அமைப்பை சரிசெய்து, உடைந்த பின்காலை நீக்கி, அவள் உடல்நலம் தேரி வர உதவிசெய்துகிட்டி இருக்க அறுவைசிகிச்சை மருத்துவருக்காக ஸ்பெஷலா பின்பக்கத்தை ஆட்டி, முகத்தை நக்கி நன்றி சொல்றா. தங்களோட நேரம், பணம், அன்பைக் கொடுத்து உதவிசெய்த பிற நபர்களுக்கும் டக்காவோட நன்றியில பங்கிருக்கு.
இந்த நகரம் அதில் வாழுற விலங்குகளுக்கு ஆபத்தான இடமா இருக்கலாம். சாலையைக் கடப்பதில விலங்குகளுக்கு அவ்வளவு திறமை கிடையாது. வாகனங்களோ எங்கயோ எப்பவும் படுவேகமா பறந்துகிட்டு இருக்கும். எங்காவது அடிபட்ட விலங்கைப் பார்த்து அதுக்கு உங்களால உதவிசெய்ய முடியலன்னா, உதவிசெய்யக்கூடிய யாரையாவது தேடுங்க. நீங்க போற வாகனம் படுவேகமா போனா, ஓட்டுறவங்கள கொஞ்சம் பொறுமையா போகச் சொல்லுங்க. உங்க தெருவில இருக்கும் விலங்குகளைப் பராமரிக்கிறவங்களப் பார்த்தா அன்பா சிரியுங்க.