deepa karmaakar seerana samanilayil

தீபா கர்மாகர் - சீரான சமநிலையில்

தீபா கர்மாகர் ஒலிம்பிக் போட்டியில் பங்குபெற்ற முதல் இந்தியப் பெண் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை ஆவார். 2016ல் ரியோவில் நடந்த போட்டியில் அவர் நான்காவதாக வந்தார். திரிபுராவில் வளர்ந்த அவர், ஐந்து வயதிலேயே ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சியைத் தொடங்கினார். அகர்தலாவில் இருந்து ரியோவிற்கு சென்ற இவரது பயணத்தை இங்கே பார்க்கலாம்.

- Pavithra Murugan

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

தீபாவிற்கு குதிப்பது என்றால் மிகவும் பிடிக்கும்.

அவளுக்கு மரம் ஏறவும் மிகவும் இஷ்டம்.

எல்லாவற்றையும் விட அவளுக்கு பூஜா அக்காவுடன் ஓடி ஆடி விளையாடுவது ரொம்பப் பிடிக்கும்.

தீபா, திரிபுராவின் தலைநகரமான அகர்தலாவில் வசித்து வந்தாள். அகர்தலா பச்சைப்பசுமையோடு, அழகான அகில் மரங்கள், அன்னாசிப்பழம், ஆரஞ்சு மற்றும் லிட்சி பழத்தோட்டங்களை கொண்டு இருந்தது.

அவள் அப்பா ஒரு தேசிய பளுத்தூக்குதல் சாம்பியன். பெரும்பாலான நாட்களில், அவர் பயிற்சியாளராக இருந்த உடற்பயிற்சிக்கூடத்திற்கு, தீபா அவரோடுச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தாள்.

அம்மா அப்பா இருவரும் தங்கள் மகள்கள் விளையாட்டில் ஈடுபட வேண்டும் என்று விரும்பினர்.

அதனால், ஐந்து வயதிலேயே தீபா பயிற்சியைத் தொடங்கினாள்.

ஜிம்னாஸ்டிக்ஸ் என்பது அக்ரோபாட்டிக்ஸ் மற்றும் ஏரோபிக்ஸை போன்ற விளையாட்டே ஆகும். வேகமான அசைவுகள். கவிழ்தல் மற்றும் உயர்தல்.மென்மையான சுழற்சிகளும், திருப்பங்களும்.

குறுகிய பீம்-கள், வால்ட்-கள், மற்றும் சமம் இல்லாத பார்-கள் மேலே வியக்க வைக்கும் குட்டிக்கரணங்கள்!

ஜிம்னாஸ்டிக்ஸ்ற்கு, தடுமாறாத உடலும், நிறைய மன வலிமையும், தசைகளின் மீது கட்டுப்பாடும் தேவை. ஒரு தவறான அடி எடுத்து வைத்தால், மோசமாக விழ நேரிடும். அது கால், அல்லது முதுகு எலும்பு முறிவிற்கு காரணமாகலாம்!

தீபா பயிற்சியைத் தொடங்கினாள்.

ஆனால், அவளுக்கு கீழே விழும் பயம் அதிகமாக இருந்ததால், பீம் மேலே கூட ஏற மறுத்தாள்.

அவள் நிறைய புகார்களுடன் புலம்பிக்கொண்டாள்.

அவளுடைய அப்பா அவள் தன் பயத்தில் இருந்து மீண்டு வருவாள் என்று நம்பினார். அவர் நினைத்தது சரிதான்!

வ்வீவீவீவீ! தீபா குட்டிக்கரணம் செய்தாள். வூவூவூஷ்ஷ்ஷ்! அவள் காற்றில் மிதந்தாள். அப்பாவும், அவளுடைய பயிற்சியாளர், சோமா நந்தியும் மிக்க மகிழ்ச்சி கொண்டனர்.

வ்வீவீவீவீ!

தீபா குட்டிக்கரணம் செய்தாள்.

வூவூவூஷ்ஷ்ஷ்!

அவள் காற்றில் மிதந்தாள்.

அப்பாவும், அவளுடைய பயிற்சியாளர், சோமா நந்தியும் மிக்க மகிழ்ச்சி கொண்டனர்.

தீபாவிற்கு ஒன்பது வயதான போது, அவள் 2002ல் வடகிழக்கு இந்திய போட்டிகளில், பாலன்ஸிங் பீம் விளையாட்டில் பங்குபெற்றாள். என்ன நடந்தது என்று நினைக்கிறீர்கள்! தீபா இங்கு தங்கப் பதக்கம் வென்றாள். என்ன ஒரு நல்ல தருணம் அவளுக்கு! இந்த வெற்றி அவளுக்கும் அவள் தந்தைக்கும் மிகுந்த நம்பிக்கையைக் கொடுத்தது. இனிமேலும் அவள் தயக்கம் கொண்ட ஜிம்னாஸ்ட் இல்லை.

தீபாவிற்கு ஒன்பது வயதான போது, அவள் 2002ல் வடகிழக்கு இந்திய போட்டிகளில், பாலன்ஸிங் பீம் விளையாட்டில் பங்குபெற்றாள். என்ன நடந்தது என்று நினைக்கிறீர்கள்! தீபா இங்கு தங்கப் பதக்கம் வென்றாள்.

என்ன ஒரு நல்ல தருணம் அவளுக்கு!

இந்த வெற்றி அவளுக்கும் அவள் தந்தைக்கும் மிகுந்த நம்பிக்கையைக் கொடுத்தது. இனிமேலும் அவள் தயக்கம் கொண்ட ஜிம்னாஸ்ட் இல்லை.

தீபா மேலும் கடினமாக உழைக்க தேவை இருந்தது. அவளது பாதம் தட்டையாக இருந்ததால், அவளுடைய உள்ளங்காலில் இருக்கவேண்டிய இயற்கையான வளைவு இல்லை. தட்டையான பாதம் ஒரு ஜிம்னாஸ்ட் ஓடுவதையும், குதித்த பின், நிலத்தில் இறங்குவதையும் பாதிக்கும்.

ஆனால், தீபா, இவ்வளவு தூரம் வந்த பின், மனம் தளர கூடாதென முடிவெடுத்தாள்.

அவளுடைய பயிற்சியாளர் சோமா நந்தி, குரு பிஷ்வெஸ்வர் நந்திக்கு, தீபாவை அறிமுகம் செய்தார், இவர் அவளுடைய பயிற்சிக்கு பொறுப்பெடுத்துக் கொண்டார்.

சீக்கிரமே, அவள் காலில் அந்த வளைவு உண்டாவதற்கு சிறப்பு உடற்பயிற்சிகள் செய்யத் தொடங்கினாள்.

ஜிம்னாஸ்டிக்ஸ் இந்தியாவில் எப்போதுமே பிரபலமாக இருந்ததில்லை. ஆனால், தீபாவிற்கு, அவள் பயிற்சி செய்வதற்கான அடிப்படை வசதியோ, இடமோ இல்லாதது ஒரு குறையாகத் தெரியவில்லை.

ஜிம்னாஸ்டிக்ஸ் இந்தியாவில் எப்போதுமே பிரபலமாக இருந்ததில்லை.

ஆனால், தீபாவிற்கு, அவள் பயிற்சி செய்வதற்கான அடிப்படை வசதியோ, இடமோ இல்லாதது ஒரு குறையாகத் தெரியவில்லை.

குருஜி ஸ்கூட்டர் பாகங்களில் இருந்து ஜிம்னாஸ்டிக்ஸ் பழகுவதற்குத் தேவையான குதிக்கும் பலகைகளைச் செய்தார்.

விழுந்தால் அடிபடாமல் இருக்கச் செய்யப்பட்ட மெத்தைகள், ஒன்றின் மேல் ஒன்றாக வைத்து, அவளுடைய வால்ட் நடைமேடையாக உபயோகித்தார்கள். பழைய கார்களின் இருக்கைகள் அவள் குதித்தப் பின் இறங்கும் இடமாக விளங்கியது.

தீபாவின் நாட்கள் ஓய்வில்லாமல் ஓடியது!

அவள் ஓடினாள்; குதித்தாள்.

சுழன்றாள்; திரும்பினாள்.உருண்டாள்; ஏன்! தலைக்கீழாய்க் கூட நின்றாள்!

இவை அனைத்தும் ஒரு நாளின் எட்டு மணிநேரத்தில்.

அவள் எலும்புகளும் தசைகளும் மிகவும் புண்ணாகி வலித்தது . அவள் எரிச்சல் நிறைந்த பசியோடும், மிகுந்த சோர்வோடும் இருந்தாள்.

அவள் எலும்புகளும் தசைகளும் மிகவும் புண்ணாகி வலித்தது .

அவள் எரிச்சல் நிறைந்த பசியோடும், மிகுந்த சோர்வோடும் இருந்தாள்.

பெரும்பாலான சிறுவர்கள் போல், தீபாவிற்கும் ஐஸ் கிரீம் என்றால் மிகவும் பிடிக்கும்.ஆனால், அவள் சாப்பிடும் உணவு கடுமையாக கட்டுப்படுத்தப் பட்டது.

சில சமயங்களில், தீபா வீட்டில் இருந்து தூரமாக இருக்கும் விளையாட்டு விடுதியில் தங்கி, பயில வேண்டி இருந்தது. அதற்கும் மேலாக, அவளுக்குத் தேர்வுகளும் இருந்தது!

அவள் இவ்வளவு கடினமாக உழைக்க வருத்தப்பட்டாளா? இல்லவே இல்லை!

தீபாவிற்கு பதக்கங்கள் வெல்வதே முக்கியமாக இருந்தது.அதில் அவள் சிறந்தவளாக ஆக விரும்பினாள்.

வருடங்கள் ஓடின, தீபா இளையோர் மற்றும் தேசிய பிரிவில் பங்கேற்ற அனைத்து விளையாட்டுகளிலும் வென்றாள். இருந்தாலும், 2010 காமன்வெல்த் போட்டிகளில் அவள் எதுவும் வெல்லவில்லை.

ஆஷிஷ் குமார் என்பவர் அந்தப் போட்டியில் பதக்கங்கள் வென்ற முதல் இந்திய ஜிம்னாஸ்டிக் வீரர் ஆவார் - இந்தியாவிற்கு அது ஒரு பெருமையான தருணமாக விளங்கியது.

அவரின் வெற்றி தீபாவிற்கு ஊக்கமளித்தது. மேலும் நன்றாக விளையாட உறுதி எடுத்தாள்.

நான்கு வருடங்களுக்குப் பின், 2014 கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகளில், தீபா வெண்கலம் வென்றாள். மேலும், 2015 ஹிரோஷிமா ஆசிய ஜிம்னாஸ்டிக்ஸ் சாம்பியன்ஷிப்பிலும் வென்றாள். வெற்றியாளர்கள் மேடையில் நிற்பது, கிளர்ச்சியூட்டும் படி இருந்தது.

நான்கு வருடங்களுக்குப் பின், 2014 கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகளில், தீபா வெண்கலம் வென்றாள். மேலும், 2015 ஹிரோஷிமா ஆசிய ஜிம்னாஸ்டிக்ஸ் சாம்பியன்ஷிப்பிலும் வென்றாள்.

வெற்றியாளர்கள் மேடையில் நிற்பது, கிளர்ச்சியூட்டும் படி இருந்தது.

இதுவரை, தீபா 77 பதக்கங்கள் வென்றிருந்தாள். அதில், 67 தங்கப் பதக்கங்கள்! ஆனால், குருஜி, அவள் சர்வதேச அளவில் ஒரு இடம் பிடிக்க வேண்டும் என்று விரும்பினார் - பெரும்பாலான ஜிம்னாஸ்டிக் வீரர்கள்/ வீராங்கனைகள் முயற்சிக் கூடச் செய்யாத ஏதோ ஒன்றை இவள் சிறப்பாக செய்ய வேண்டும் என்று நினைத்தார். அது மிகவும் துணிவான, ஆபத்தான செயலாக இருக்க வேண்டும்.

இதுவரை, தீபா 77 பதக்கங்கள் வென்றிருந்தாள். அதில், 67 தங்கப் பதக்கங்கள்!

ஆனால், குருஜி, அவள் சர்வதேச அளவில் ஒரு இடம் பிடிக்க வேண்டும் என்று விரும்பினார் - பெரும்பாலான ஜிம்னாஸ்டிக் வீரர்கள்/ வீராங்கனைகள் முயற்சிக் கூடச் செய்யாத ஏதோ ஒன்றை இவள் சிறப்பாக செய்ய வேண்டும் என்று நினைத்தார்.

அது மிகவும் துணிவான, ஆபத்தான செயலாக இருக்க வேண்டும்.

குருஜி அவளுக்குப் புரோதுநோவா வால்ட் செய்ய பயிற்சி கொடுத்தார். இதை முதன் முதலில் சீராகச் செய்த, யெலினா செர்கேயெவ்னா புரோதுநோவா, என்பவறின் நினைவில் பெயரிடப்பட்டது.

உலகத்திலேயே நான்கு பெண்கள் தான் இந்த மிக ஆபத்தான முறையை செய்து முடித்திருந்தார்கள்.

2016ல், தீபாவிற்கு 23 வயதாகி இருந்த போது, ரியோ ஒலிம்பிக் போட்டியில், அவள் திறனைக் காட்டத் தயாராக இருந்தாள். நம் நாடே அவள் பதக்கம் வெல்வதைப் பார்க்க ஆவலாக இருந்தது.

ஆனால், அவள் வெறும் 0.15 பாயிண்ட் வித்தியாசத்தில் பதக்கம் வெல்வதைத் தவறவிட்டாள்.

ஆனால், அவளது செயல்திறன் எல்லோரையும் பிரமிப்படையச் செய்தது.

தீபா அடுத்த ஒலிம்பிக் போட்டிக்கு ஆயத்தமாக தொடங்கிய போது, புதிய திட்டம் ஒன்றை வைத்திருந்தாள். அவள் புதிதாக ஒரு ஜிம்னாஸ்டிக் முறையை உருவாக்க நினைத்தாள்.

ரோமானிய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை நதியா கொமாநெசி அவளைச் சந்தித்த போது, "இந்தியாவிற்கு தீபா கர்மாகர் போன்ற ஓரு முன்மாதிரி இருப்பது மிகவும் சிறந்தது. சிறுவர்கள் அவளைப் பார்த்து, ஜிம்னாஸ்டிக்ஸ் இல் ஈடுபடுவார்கள் என்று நம்புகிறேன், ஏனெனில் நாங்கள் எல்லோரும் அப்படித் தான் தொடங்கினோம்," என்றார்.

தீபா தொடர்ந்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்துக் கொண்டு இருக்கிறாள்.

(தீபா அவள் பயிற்சியாளர் பிஷ்வெஸ்வர் நந்தியுடன்)

தீபா கர்மாகர் ஆகஸ்ட் 9, 1993ல் அகர்தலாவில் பிறந்தார். இவர் ஒலிம்பிக் போட்டியில் போட்டியிட்ட முதல் பெண் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை ஆவார்.

2016 ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்குபெற்றார். மேலும், ஆபத்தான புரோதுநோவா வால்ட்டை சீராக முடித்த ஐந்து பெண்களில் ஒருவர் ஆவார். அவளுக்கு ஐந்து வயது ஆன போது, தேசிய பளுத்தூக்குதல் சாம்பியனான இவளது தந்தை, துலால் கர்மாகர், இவளது ஆரம்ப கால பயிற்சியைத் தொடங்கினார்.

சோமா நந்தி இவளது முதல் பயிற்சியாளராக இருந்தார். பின், பிஷ்வெஸ்வர் நந்தி என்ற தேசிய ஜிம்னாஸ்டிக் சாம்பியன் இவள் பயிற்சியை கண்காணித்தார். தீபாவிற்கு கேல் ரத்னா விருது மற்றும் பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.