அந்த மாமாவை எனக்கு சுத்தமாகப் பிடிக்காது. அவர் எங்கள் வீட்டுக்கு வருவார். அவர் வரும்போது...
...முறைத்துப் பார்த்தபடி வருவார். அருகில் அழைப்பார். வம்பு
இழுப்பார்.
நான் அருகில் போகவேமாட்டேன். எனக்குப் பிடிக்கவே பிடிக்காது.
எப்படியாவது அவர் பிடியிலிருந்து நழுவிடுவேன்!
இதைப்பற்றி ஒரு நாள் வீட்டில் பேசினேன். அம்மாவிடம் எல்லாவற்றையும் சொல்லிவிட்டேன்.
அம்மா அந்த மாமாவிடம் பேசினார். அம்மா அவரை எச்சரித்தார்.
அதன்பின் அவர் எங்கள் வீட்டுக்கு வருவதையே நிறுத்திவிட்டார்!