எலி ஒரு புது வீட்டைப் பார்த்துக் கொண்டு இருந்தது.
இது ஒரு நல்ல வீடாகத் தெரிகிறது.
"நீ என்னுடன் வந்து தூங்கலாம்", என்றது குட்டி நாய்.
"நன்றி" என்றது எலி.
அந்த இரவு, எலியின் கனவு துள்ளல் ஆகவும்
சேர் ஆகவும் இருந்தது.
"நீ என்னுடன் வந்து தூங்கலாம்", என்றது கிளி.
"நன்றி" என்றது எலி.
அந்த இரவு, எலியின் கனவு கூச்சல் ஆகவும்
காட்டுத் தனம் ஆகவும் இருந்தது .
"நீ என்னுடன் வந்து தூங்கலாம்", என்றது மீன்.
"நன்றி" என்றது எலி.
அந்த இரவு, எலியின் கனவு குளிர் ஆகவும்
ஈரம் ஆகவும் இருந்தது .
எலிக்கு எங்காவது வெது வெதுப்பு ஆகவும் உலர்ந்த இடம் ஆகவும் தேவைப்பட்டது.
எலி பக்கத்தில் இருந்த புத்தக அலமாரியை கண்டது.
அந்த இரவு, எலியின் கனவு வெது வெதுப்பு ஆகவும் கதகதப்பு ஆகவும்
இருந்தது .
நள்ளிரவு வணக்கம், எலி.