ellaam andhap poonaiyin thavaru

எல்லாம் அந்தப் பூனையின் தவறு !

ஒரு விஷமக்காரப் பூனையால் இந்தக் கதையில் வரும் சிறுவன் அவன் வீட்டுப்பாடத்தை செய்ய முடியாமல் போனது. இது ஏதோ நொண்டிச்சாக்கு போல் தெரிகிறதா ? சரி, கதையை மேலே படியுங்கள் எப்படி ஒவ்வொரு செயலும் இன்னொரு செயலை பாதித்துக்கொண்டே சென்று வீட்டுப்பாடத்தில் முடிந்தது என்று புரிந்து கொள்வீர்கள் !!

- Vidhu parna

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

நீ ஏன் வீட்டுப்பாடம் எழுதவில்லை ??

மிஸ், இது எல்லாம் அந்தப் பூனை செய்த தவறு !!

அந்தப் பூனை மரத்தின் மீது சிக்கிக்கொள்ளாமல் இருந்திருந்தால் நான் மேலே ஏற ஏணியை எடுத்து இருக்க மாட்டேன் !

நான் மரத்தின் மீது ஏற ஏணியை எடுத்திருக்காவிட்டால் சுத்தியலால் ஆணி அடித்து அதனை சரி செய்ய எனக்குத் தேவை இருந்திருக்காது !

அதனை சரி செய்யும் தேவை இருந்திருக்காவிட்டால், நான் சத்தம் போட்டு குழந்தையை எழுப்பியிருக்க மாட்டேன் !

நான் குழந்தையை எழுப்பி இருக்காவிட்டால், என் அம்மா சமையல் அறையிலிருந்து வேகமாக வெளியே வந்திருக்கமாட்டாள்

அம்மா சமையல் அறையில் இருந்து வெளியே வந்திருக்காவிட்டால், அங்கே குரங்கு புகுந்து இருக்காது !!

அங்கே குரங்கு புகுந்து இருக்காவிட்டால் அது அங்கு இருந்த சாப்பாட்டை எல்லாம் அது சாப்பிட்டு இருக்காது !

அது எல்லா உணவையும் சாப்பிட்டு இருக்காவிட்டால், என் அப்பா ஹோட்டலுக்குச் சென்று ரொட்டியும் கோழிக்கறியும் வாங்கி இருக்க மாட்டார்.

என் அப்பா ஹோட்டலில் ரொட்டியும் கோழிக்கறியும் வாங்கி இருக்காவிட்டால் அவரை ஒரு நாய் பின் தொடர்ந்து வீட்டிற்கு வந்து இருக்காது !!

அப்பாவைப் பின் தொடர்ந்து நாய் வீட்டிற்கு வந்து இருக்காவிட்டால் அது என்னுடைய வீட்டுப்பாட நோட்டை தின்று இருக்காது !!

அப்பொழுது, உன் வீட்டுப்பாடத்தை நாய் தின்றுவிட்டது என்று சொல்கிறாயா ?

ஆமாம் மிஸ் .... எல்லாம் அந்தப் பூனையால் வந்த வினை !! அது அந்தப் பூனையின் தவறு !!