ellaam antha poonaiyin kutram

எல்லாம் அந்த பூனையின் குற்றம்

இந்தக் கதையிலுள்ள சிறுவன் வீட்டுப் பாடத்தை முடிக்க முடியாததற்கு காரணமக ஒரு பூனையின் போக்கிரித்தனத்தை குறை கூறுகிறான். அது எப்படி? கதையைப் படித்தால் உங்களுக்கே புரியும் ...

- Badhrinath Jagannathan

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

ஆமாம்! கேளுங்கள்! அந்தப் போக்க்ரிப் பூனை நேற்று மரத்தின் மீது ஏறி இறங்க முடியாமல் அகப்பட்டுக் கொண்டது.   அது அகப்பட்டு இருக்காவிட்டால் அதைக் காப்பாற்ற ஏணியைத் தேடி சென்றிருக்க மாட்டேன் !

நான் அந்த உடைந்த ஏணியைத் தேடிப் போயிருக்காவிட்டால் அந்த ஏணியை சரி செய்திருக்க மாட்டேன்!

நான் குழந்தையை எழுப்பி இருக்காவிட்டால் என் தாயார் சமையல் அறையிலிருந்து  வெளியேறியிருக்க மாட்டார்கள்!

அந்த குரங்கு உள்ளே நுழைந்திருக்காவிட்டால் எங்கள் உணவு எல்லாவற்றையும் உண்டிருக்காது!

எங்கள் உணவு எல்லாவற்றையும் உண்டிருக்காவிட்டால் என் தந்தை தேநீர் கடையில் ரொட்டியும் கோழிக்கறியும் வாங்கப் போயிருக்க மாட்டார்!

என் தந்தை தேநீர் கடைக்குப்ப் போயிருக்காவிட்டால் அங்கிருந்த நாய் ஒன்று அவரைப் வீட்டுவரை பின்தொடர்ந்திருக்காது!

நாய் அவரைப் வீட்டுவரை பின்தொடர்ந்திருக்காவிட்டால் என் வீட்டுப்பாடத்தைக் கடித்துக் கொதரியிருக்காது!

நாய் உன் வீட்டுப்பாடத்தைக் கடித்துக் கொதரியிரயாதா?

ஆமாம் ஆசிரியை அவர்களே! எல்லாம் அந்தப் பூனையின் குற்றம்!