ellame thalaigeel

எல்லாமே தலைகீழ்!

எல்லாமே தலைகீழ்! என்னதான் ஆச்சு குட்டிப்பயலின் குட்டி அறைக்கு?

- Monica Rasna J

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

இவ்வளவு சீக்கிரமா முழிச்சிட்டேனே. எனக்கு  என்னதான் ஆச்சு இன்று?

ஒரு நிமிஷம்... என்னவோ விசித்திரமா இருக்கே!

அது அது எப்படி இருக்கணுமோ அப்படி இல்லையே. எல்லாமே தலைகீழ்!

யாரோ என்கிட்டக்க சத்தமா கத்துவது கேட்குதே!

கட்டில் ஒரு பக்கம் சுவர் ஏறிட்டு இருக்க...

குட்டி கடிகாரமோ பல மடங்கு பெரிசா வளர்ந்துட்டு இருக்கே!

எங்க குடை என்னவோ சுழன்று சுழன்று ஆட...

என் சிவப்பு நீல தொப்பியோ க்ளிக் க்ளிக் என்று சப்தம் தருதே!

என்னதான் ஆச்சு எங்க குட்டி அறைக்கு?

அச்சோ மயங்கி மயங்கி வருதே எனக்கு!

எங்க விசிறி ஒரு பெரிய ஆக்டோபஸா மாறிட...

என் குட்டி தங்கச்சியோட பொம்மகுட்டியோ பருப்பு சோறு சாப்பிடுதே!

எங்க வீட்டு குண்டு பூனை என் அப்பாவோட நாற்காலியில் ஜம்முன்னு

உக்காந்து இருக்கதென்ன... அட அந்த பக்கமா தொலைக்காட்சியில எலிக்குட்டி செய்தி வாசிக்கிறதென்ன...

இந்த பக்கம் ஆ... நானா? இவ்ளோ பெரிசாவா?

கண்ணாடியில் ஏழு ஆடியாக தெரிகிறேனே!

செம்மயா கத்தி கதறி அழுக போறேன் நான்...

"தம்பி தம்பி தம்பி இந்த பக்கம்... இருப்பா தம்பி... மன்னிச்சுக்கோ.

என்னால ஆனத இப்போவே சரி செய்கிறேன்..."

யாரது???  அட மாயாவியா?

"ஆ ஆமா.. என்னாலதான் சின்னதா ஒரு தப்பு தெரியாம நடந்துருச்சுப்பா.

இந்த மாயாவி மாமாவ மன்னிச்சுக்கோ சரியா!"

...

ஜினுக்கு ஜிப்பா ஜிய்யயாலோ தமுக்கு தப்பான் தயாலோ! ஜீ.. பூம்.. பா...!

வந்துரு வந்துரு எல்லாமே பழய மாதிரி வந்துரு! ஒண்ணு ரெண்டு மூணு ஆஆ!

ஹையா... எல்லாம் வந்தது பழய மாதிரியே...