en azhaippu enge sendrathu

என் அழைப்பு எங்கே சென்றது?

நாம் யாரையாவது தொலைபேசியில் கூப்பிடும்போது, நம் குரல் எப்படி அவ்வளவு தூரம் போகிறது? தொலைபேசிகள் குரலை நீண்ட தூரப் பயணம் செய்யவைப்பது எப்படி என்பதைத் தெரிந்துகொள்ளலாம், வாருங்கள்!

- Ramya Satheesh

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

தொலைபேசியில் பேசும்போது நம்முடைய குரல், ஒலி அலைகளாக அதற்குள் நுழைகிறது.

தொலைபேசியின் ஒலிவாங்கிக்குள் செல்லும் ஒலி அலைகள் மின் சமிக்ஞைகளாக மாற்றப்படுகின்றன.

ஒலிவாங்கி

தொலைபேசியில் உள்ள அலைவாங்கி, மின் சமிக்ஞைகளை மின்காந்த அலைகளாக மாற்றுகின்றது. மின்காந்த அலைகள் அருகாமையில் இருக்கும் அலைபேசி கோபுரங்களுக்குச் செல்கின்றன.

அங்கிருந்து பெரிய அலைபேசி கோபுரத்துக்கு அனுப்பப்படுகின்றன.

பெரிய அலைபேசி கோபுரங்கள் அந்த அலைகளை சமிக்ஞைகளாக கம்பி வடங்களின் வழியே அனுப்புகின்றன.

மலைகளைக் கடந்தும்...

சாலைகளின் மேலாகவும்...

கடல்களின் அடியிலும் கூட...

பயணித்து, அழைக்கப்படுபவருக்கு அருகாமையில் இருக்கும் பெரிய அலைபேசி கோபுரத்திற்குப் போய் சேருகின்றன.

பெரிய கோபுரம் அந்த சமிக்ஞைகளை மின்காந்த அலைகளாக மாற்றி...

அழைக்கப்படுபவருக்கு பக்கத்திலிருக்கும் அலைபேசி கோபுரத்திற்கு அனுப்புகிறது.

தொலைபேசியிலுள்ள அலைவாங்கி அந்த மின்காந்த அலைகளை உள்வாங்குகிறது. அதன்பின், தொலைபேசி அந்த அலைகளை மின்சமிக்ஞைகளாக மாற்றுகிறது.

கடைசியில் ஒலிபெருக்கி அந்த மின்சமிக்ஞைகளை மீண்டும் ஒலி அலைகளாக மாற்றுகிறது.

ஒலிபெருக்கி

இப்படித்தான் அழைக்கப்பட்டவருக்கு ஒலி கேட்கிறது.

ஒலி அலைகள்

மின் சமிக்ஞைகள்

மின்காந்த அலைகள்

சிறிய அலைபேசி கோபுரம்

பெரிய அலைபேசி கோபுரம்

நிலத்தடி வயர்கள்

பெரிய அலைபேசி கோபுரம்

சிறிய அலைபேசி கோபுரம்

மின்காந்த அலைகள்

மின் சமிக்ஞைகள்

ஒலி அலைகள்

என் அழைப்பு எப்படிச் சென்றது?