என் ஷூவில் ஒரு கூழாங்கல் இருக்கிறது, முன்பெல்லாம் அதில் எதுவும் இல்லை! இப்பதான் இருக்கு.
மேளக் கச்சேரி கேக்க போனேனே, அந்தத் தெருவில் இருந்து வந்திருக்குமோ? டும்! டும்ம! டும்!
அல்லது வானத்திலிருந்து வந்ததா? ஒரு மேகமோ பறவையோ எறிந்திருக்குமோ? அல்லது ஒரு அரக்கனிடமிருந்து கைதவறி விழுந்திருக்குமோ?
என் ஷூவில் ஒரு கூழாங்கல் இருக்கிறது, முன்பெல்லாம் அதில் எதுவும் இல்லை! இப்பதான் இருக்கு.
தவளையை நண்பனாக்கிக் கொண்டேனே, அந்தப் பூங்காவில் இருந்து வந்திருக்குமோ? கொர்ர்! கொர்ர்! கொர்ர்!
அல்லது நீண்ட நாட்களுக்கு முன்பு கேட்ட கதையில் இருந்த பறக்கும் கம்பளத்தில் வந்ததா?
முக்கி முனகிக் கொண்டு, லாகூரிலிருந்து வந்த ரயிலில் வந்ததா?
சுக்! சுக்! சுக்!
என் ஷூவில் ஒரு கூழாங்கல் இருக்கிறது முன்பெல்லாம் அதில் எதுவும் இல்லை! இப்பதான் இருக்கு.
அல்லது தொலைவிலிருந்து வந்த கடல் அசுரனுடன் முழு தூரமும் நீந்தி நீந்தி வந்ததா?
என் ஷூவில் ஒரு கூழாங்கல் இருக்கிறது முன்பெல்லாம் அதில் எதுவும் இல்லை! இப்பதான் இருக்கு.
பசியோடு இருந்த காகங்கள், துரத்திய மீன் வண்டியில் சவாரி செய்து வந்ததா?கா! கா! கா!
அல்லது கதைப்புத்தகம் எடுக்கப் போயிருந்தேனே, அந்த நூலகத்திலிருந்து வந்திருக்குமோ?
என் ஷூவில் ஒரு கூழாங்கல் இருக்கிறது முன்பெல்லாம் அதில் எதுவும் இல்லை! இப்பதான் இருக்கு.அட, அது எங்கிருந்துதான் வந்ததோ? எனக்கு அது மட்டும் தெரிந்தால்!
ஓ, இதோ பார்! என் ஷூவில் ஒரு இறகு இருக்கிறது!