எனக்கு இரவில் தாகமாக இருந்ததால் படுக்கையில் இருந்து எழுந்தேன். எனக்கு குடிக்க தண்ணீர் வேண்டும். நான் என்னுடைய காலணிகளை கட்டிலுக்கு அடியில் தேடினேன்.
ஐயோ, என்னுடைய கட்டிலுக்கு அடியில் ஒரு புலி பதுங்கி இருக்கிறது.
இப்பொழுது நான் என்ன செய்ய வேண்டும்?
நான் அம்மாவை அழைக்க வேண்டுமா? ஒருவேளை என் சத்தம் கேட்டு, புலி உறுமுமா?
நான் அதைப் பற்றி நினைக்காமல் தூங்கச் செல்ல வேண்டுமா? ஆனால் என்னுடைய தூக்கம் ஓடியே போய்விட்டதே.
பிறகு யாரோ என் அறையில் மின் விளக்கை ஏற்றுகிறார்கள். பார்த்தால், அங்கு அறைவாயிலில் அம்மா நின்று கொண்டிருக்கிறார்கள்.
"என்னவாயிற்று குட்டி, நீங்கள் என்னை அழைத்தீர்களா?" என்று கேட்டார்கள் அம்மா.
நான் புலி பதுங்கியிருக்கும் இடத்தை சுட்டிக்காட்டினேன்.
அம்மா குனிந்து கட்டிலுக்கு அடியிலிருந்து புலியை வெளியே இழுத்தார்கள்.
ஹே, இது புலி அல்ல. இது என்னுடைய தடிமனான மஞ்சள்-கருப்பு நிற கம்பளிச்சட்டை. இதன் பொத்தான்கள் புலியின் கண்களைப் போல ஜொலிக்கின்றன.
நான் ஒன்றும் இல்லாததற்கு பயந்து விட்டேன். அம்மா எனக்கு தாகம் தணிக்க தண்ணீர் தந்தார்கள்.
இப்பொழுது நான் தூங்கிவிடுவேன். தூக்கத்தில் நிஜ புலிகளைப் பற்றி கனவும் காண்பேன்.