எனக்கு பல நண்பர்கள் உண்டு.
சில நண்பர்கள் என்னைவிட மூத்தவர்கள்.
சில நண்பர்கள் என்னைவிட இளையவர்கள்.
சில நண்பர்கள் முதியவர்கள்.
சில நண்பர்கள் சின்னஞ்சிறியவர்கள்!
சில நண்பர்களுக்கு வால் இருக்கும்...
சில நண்பர்களுக்கு கால் இருக்காது.
சில நண்பர்கள் பறக்கின்றனர்.
ஓ! புத்தகங்களும் என் நண்பர்கள்தான்!
ஆனால் என் மிகச்சிறந்த நண்பர் யார்?
யார்? யார்? யார்?
என் அம்மா!