en nerungiya nanbar

என் நெருங்கிய நண்பர்

எனக்கு நிறைய நணபர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரையும் எனக்கு பிடிக்கும். ஆனால், அவர்களுள் ஒருவர் எனக்கு மிகவும் சிறப்பானவர்.

- karthik s

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

எனக்கு நிறைய நண்பர்கள் உள்ளனர்.

என் நண்பர்களில் சிலர் என்னை விட பெரியவர்கள்

சிலர் என்னை விட சிறியவர்களும் கூட...

ஒரு சில நண்பர்கள் வயதானவர்கள்.

மேலும் சில பேர் மிகவும் சின்னஞ்சிறியவர்கள்.

ஒரு சில நண்பர்களுக்கு வாலுண்டு...

மேலும் சிலருக்கு கால்களே இல்லை.

என் நண்பர்களில் சிலர் பறப்பார்கள். சிலர் தண்ணீரில் நீந்துவார்கள்.

ஓ! புத்தகங்கள் கூட எனது நண்பர்கள் தான்.

ஆனால், யார் என்னுடைய மிக நெருங்கிய நண்பர்?யார்? யார்? யார்?

என் அம்மா!!!