நான்தான் அமன். இது என் சட்டை.
இது அடர்சிவப்பு நிறம். என் சிவப்புச் சட்டையை எனக்கு ரொம்பப் பிடிக்கும்.
என் சிவப்புச் சட்டை ரொம்பப் பழையது. நான் சிறுவனாய் இருக்கும்போது வாங்கினேன்.
பலமுறை இது அழுக்காகி இருக்கிறது.
மீண்டும் மீண்டும் துவைக்கப் பட்டது. இப்போது இதில் மூன்று துளைகள் இருக்கின்றன. இன்னு அதிகமாகக்கூட் இருக்கலாம். ஆனால் என் சட்டை மிக மென்மையானது. நான் விரும்பும் படி எனக்கு மிக பொருத்தமாக இருக்கிறது.
இவர் என் அம்மா. எனக்கு இவரை ரொம்பப் பிடிக்கும். அம்மாவும் என்னை விரும்புகிறார்.
அவர் எனக்கு சாக்லேட் தருவார். என் பள்ளிப் பாடங்கள் படிக்க உதவுவார். ஒருவேளை,நான் அனுமதித்தால் என் தலைமுடியை சீவுவார்.
அம்மாவுக்கு என் சிவப்புச் சட்டைபிடிக்காது. அவருக்கு அதை தூக்கி வீசவேண்டும். "நான் உனக்கு அழகிய புதுச்சட்டை வாங்கித் தருகிறேன்" என்கிறார். நான் அமைதியாக இருந்து விடுவேன்.
"நான் மறுபடியு இந்த சிவப்பு சட்டையைத் துவைக்க மாட்டேன்" என்ற் சத்தமாக சொல்வார்.
"நீங்க என் சட்டையை தூக்கிப் போட முடியாது." என்று அதைவிட சத்தமாக நான் சொல்வேன்.
அம்மா என்னை முறைப்பாள். நான் முகம் சுழிப்பேன். இருவரும் பேசிக் கொள்ள மாட்டோம். அவர் தரும் ஜிலேபிகளை நான் மறுப்பேன். என் பங்கையும் சேர்த்து ஜானு அக்கா தின்பாள்.
இப்போது மாலை நேரம். என் நண்பர்கள் கிரிக்கெட் விளையாடுகிறார்கள். எனக்கு விளையாடப் பிடிக்கவில்லை. சும்மா உட்கார்ந்து வேடிக்கை பார்த்தேன். பல சிறுவர்கள் பழைய சட்டை அணிந்திருந்தனர். பாருங்கள், அதில் துளைகள் கூட இருக்கின்றன.
இப்போது குளிர்கிறது. நான் வீட்டுக்குப் போய்விடுவேன். இதோ பூ-பூ, எங்கள் தெருநாய்.
பாவம், இவனுக்கும் குளிரடிக்கும்.
அம்மா, வீட்டில் எனக்காகக் காத்திருக்கிறார். உள்ளே போனதும் என்னை அணைத்துக் கொண்டார். "நான் இன்னும் மூன்று நாள் மட்டும் இந்த சட்டையைப் போட்டுக் கொள்வேன்," என்றேன் அம்மாவிடம். "பிறகு பூபூவுக்கு கொடுத்து விடுவேன். நான் அவனை குளிர்காலத்தில் கதகதப்பாக வைத்திருப்பேன். சரியா, அம்மா? ப்ளீஸ்?" "சரி" அம்மா சிரித்தார்.
எனக்கு என் சிவப்பு சட்டை ரொம்ப பிடிக்கும்.
பூபூவுக்கு கூட ரொம்ப பிடிக்கும் என்று நினைக்கிறேன்.
ஒருவேளை, அவன் என்னோடு அதைப் பகிர்ந்து கொள்வான்?