என் தோட்டத்தில் பல அழகான பூக்கள் உள்ளன. தோட்டம் முழுவதும் பட்டாம்பூச்சிகள் உள்ளன. பட்டாம்பூச்சிகளுக்கு பூக்களை ரொம்ப பிடிக்கும்.
தோட்டத்தில் தேனீக்களும் உள்ளன. தேனீக்களுக்கும் பூக்களை பிடிக்கும். தேனீக்கள் ஒவ்வொரு நாளும் என் தோட்டத்தில் மகிழ்ச்சியாக ஒலிக்கின்றன.
அது மட்டுமா ? பெரிய தேனீக்களும் என் தோட்டத்தில் பூக்களை வட்டமிட்டு வருகின்றன.
தோட்டத்தில் உள்ள பூக்களை நெட்டைக்காலிகளும் வட்டமிட்டு வருகின்றன.
நெட்டைக்காலி ஒரு பறவையின் பெயர். அதன் வால் நீளமாக இருக்கும்.
இதோ பார், மஞ்சள் மல்லி எவ்வளவு அழகாக பூத்திருக்கிறது ! இந்த மஞ்சள் மல்லியின் இதழ்கள் மணமுள்ளவை.
அட, ஊதாப்பூவும் அழகாக பூத்திருக்கிறதே !
சிகப்பு நிற இலைகள் கொண்ட செடியை பார்த்தாயா ? இந்த செடியின் பெயர் போயின்சேட்டியா. இதன் இலைகளின் நறுமணம் என் தோட்டம் முழுதும் வீசும்.
இந்த பட்டாம்பூச்சி என் தோழி. அவளுக்கு எப்போதும் வெட்கம் தான்! ஒவ்வொரு நாளும் என் தோட்டத்திற்கு வருவாள்.
இந்த தேனீயும் என் தோழி தான். அவளும் வெட்கப்படுகிறான். அவளுக்கு வண்ண வண்ண பூக்களை மிகவும் பிடிக்கும்.
இந்த பெரிய தேனீ இருக்கிறதே ! அது எப்போதும் சத்தமாக ஒலித்துக்கொண்டே இருக்கும். தேனீக்கு பெரிதாக வெட்கம் ஒன்றும் இல்லை.
என் தோட்டத்தில் எப்போதும் சூரிய ஒளி இருக்கும். சூரியனின் ஒளியால் பூக்கள் நன்றாக வளர்கின்றன.
தோட்டம் வழியாக போகும் நண்பர்களுக்கு பூ கொடுக்க எனக்கு ஆசையாக இருக்கிறது .
இந்த அழகான தோட்டம் எனக்கு பிடித்த இடம்.
அடுத்ததாக என் தோட்டத்தில் என்ன வளர்ப்பது ?